இங்கு எல்லாமே வேர்கடலைதான்... சென்னையில் புதிதாக ’புட் கடலை’ கஃபே..!

வேர்க்கடலையில் இருக்கும் ஆரோக்கியம் மற்றும் முக்கியத்துவத்தை இந்த தலைமுறைக்கும் கொண்டு செல்லவே இந்த கஃபேவை உருவாக்கியுள்ளனர்.

இங்கு எல்லாமே வேர்கடலைதான்... சென்னையில் புதிதாக ’புட் கடலை’ கஃபே..!
புட் கடலை’ கஃபே.
  • News18
  • Last Updated: November 28, 2019, 6:10 PM IST
  • Share this:
பொழுதைப் போக்க வேண்டுமென்றால் வறுத்த வேர்க்கடலையை வாங்கி மென்றுக் கொண்டிருந்தாலே போதும் நேரம் போவதே தெரியாது என்பார்கள். பொழுதுபோக்கு இடமான பீச், பார்க் போன்ற இடங்களிலும் கட்டாயம் வேர்கடலை தள்ளு வண்டிகளை தவிர்க்க முடியாது.

இப்படி ’பெஸ்ட் படி’ யாக இருக்கும் வேர்க்கடலையை மின்னும் விளக்குகள், குளுகுளு ஏசியில் அமர்ந்து வேர்க்கடலையோடு... சூடாக காஃபியும் குடித்தால் எப்படி இருக்கும்...? அப்படியான அனுபவத்தைதான் அளிக்கிறது ’புட் கடலை கஃபே’.
இந்த கஃபேயில் எல்லாமே வேர்கடலை மட்டும்தான். அதாவது நீங்கள் எந்த ஸ்னாக்ஸ் கேட்டாலும் அது வேர்கடலையில் தயாரிக்கப்பட்டதாகதான் இருக்கும். மசாலா வேர்க்கடலை, உப்பு வேர்கடலை என்பதோடு சாண்ட்விச், பர்கரிலும் பீனட்ஸ் தடவி..வேர்கடலைகளை தூவி அளிக்கின்றனர். பயன்படுத்தும் எண்ணெயும் கடலை எண்ணெய்தான்.கோயம்புத்தூரில் நிஷா மற்றும் ஹரீஷ் தம்பதி இந்த கஃபேவை முதல் முறையாக துவங்கியுள்ளனர். அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றதால் சென்னையிலும் இரண்டாவது கிளையைத் துவங்கியுள்ளனர். வேளச்சேரி ஃபீனிக்ஸ் பல்லேடியம் மாலின் உணவு விடுதியில் இந்த கஃபே வை பிக்பாஸ் புகழ் தர்ஷன் திறந்து வைத்தார்.

வேர்க்கடலையில் இருக்கும் ஆரோக்கியம் மற்றும் முக்கியத்துவத்தை இந்த தலைமுறைக்கும் கொண்டு செல்லவே இந்த கஃபேவை உருவாக்கியுள்ளதக தெரிவிக்கின்றனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading