மசாலா பொருட்களின் ராணி என ஏலக்காய் அழைக்கப்படுகிறது. நறுமண பொருளான ஏலக்காய், பிரியாணி போன்ற உணவு வகைகளை சமைக்கும் போதும், தேநீர் தயாரிக்கும் போதும் அதன் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்தியர்கள் ஏலக்காயை கறிகள், ரொட்டி, அரிசி, தேநீர் போன்ற பலவகையான உணவுப் பொருட்களுடனும் கலந்து பயன்படுத்துகின்றனர்.
இந்தியர்களின் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி என்பது வெறும் மசாலா பொருட்களை சேமித்து வைக்க பயன்படுவது மட்டும் கிடையாது. அதில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமும், மருத்துவ குணங்களும் உள்ளதை நாம் நன்கு அறிவோம். அதேபோல் ஏலக்காய் என்பது வெறும் மணம் மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படும் மசாலா பொருள் மட்டும் கிடையாது. ஏனெனில் அதன் இயற்கையான கூறுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகின்றன.
ஏலக்காயில் மறைந்திருக்கும் 5 முக்கியமான ஆரோக்கிய பண்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்...
1. செரிமானத்தை மேம்படுத்தும்:
ஏலக்காய் விதைகளில் அதிக அளவிலான நார்ச்சத்து உள்ளது, அது செரிமான பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. ஏலக்காய் விதைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலமாக மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம். சமையலில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் ஆனது உணவை குடல் வழியாக விரைவாக கொண்டு செல்ல உதவுகிறது.
2. ரத்த அழுத்தத்தை சீராக்கும்:
ஏலக்காயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் டையூரிடிக் குணங்கள் உள்ளதால் அது, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த அளவை சமமாக பராமரிக்க உதவுகிறது. ஏலக்காய் சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது, இது இரத்த நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கிறது.
3. வாய் துர்நாற்றத்தை போக்கும்:
ஏலக்காய் பல நூற்றாண்டுகளாக வாய் துர்நாற்றத்தை போக்கவும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நன்றாக விருந்து சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்ட பிறகு வாயில் ஒரு ஏலக்காயை போட்டு மென்று சாப்பிட்டால், அவை வலுவான பூண்டு அல்லது வெங்காய வாசனையை கூட அகற்ற உதவுகின்றன. ஏனென்றால் ஏலாக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றத்தை அகற்ற உதவுகின்றன.
டிராவலின் போது ஒற்றை தலைவலியை போக்க ஈஸியான 10 வழிகள் இதோ.!
4. மனச்சோர்வை சமாளிக்க உதவும்:
ஏலக்காயில் நிறைந்துள்ள மணம் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நன்மையை தருகிறது. மனச்சோர்வாக இருக்கும் போது ஏலக்காய் கலந்த ஒரு கோப்பை தேநீர் உங்களுடைய மனநிலையையே முற்றிலும் மாற்றுவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். அதன் சுவை மற்றும் வாசனை உணர்வுகளை தளர்த்த உதவுகிறது.
5. உடல் எடையை குறைக்க உதவும்:
வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பை விரைவாக எடிக்க ஏலக்காய் உதவுகிறது. வயிற்று பகுதியில் உள்ள அதிக கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் தண்ணீரைத் தக்கவைப்பது போன்ற விஷயங்களுக்கு உதவுவதால், ஏலக்காய் ஒரு முக்கிய எடை இழப்பு மசாலா பொருளாக விளங்குகிறது.
வழக்கமான உணவில் ஏலக்காயை பயன்படுத்துவது எப்படி?
1. கொதிக்கும் நீரில் சில திறந்த ஏலக்காய்களை சேர்க்கலாம்.
2. உணவுக்கு பிறகு வாய் புத்துணர்ச்சியாக்க ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடலாம்.
3. நிம்மதியான இரவு உறக்கத்திற்கு, படுக்கைக்கு செல்லும் முன்பு பாலில் ஒரு சிட்டிகை ஏலக்காயை மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து அருந்தலாம்.
4. கறிகள் மற்றும் ஹல்வா மற்றும் கீர் போன்ற இனிப்பு வகைகளில் சேர்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cardamom, Health Benefits