ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நாளை துவாதசி... கண்டிப்பாக இதை சாப்பிடுங்கள்...!

நாளை துவாதசி... கண்டிப்பாக இதை சாப்பிடுங்கள்...!

துவாதசி உணவு

துவாதசி உணவு

Dwadasi Paranai | துவாதசி நாளில் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை சாப்பிட வேண்டும். அதிலும் துவாதசி விருந்தில் கண்டிப்பாக அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை இடம்பெற வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுதுதான் உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதம் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். இரவில் கண்விழித்து பெருமாளின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். 

வைகுண்ட ஏகாதசி அன்று பலரும் விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் அருந்துவதால், அது வயிறை சுத்தமாக்குகிறது.

மேலும் துவாதசி நாளில் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை சாப்பிட வேண்டும். அதிலும் துவாதசி விருந்தில் கண்டிப்பாக அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை இடம்பெற வேண்டும். அரிசி சாதம், மோர் குழம்பு, அகத்திக்கீரை பொறியல், பொறிச்ச கூட்டு, நெல்லிக்காய் பச்சடி, அக்கார அடிசல், பாயசம், நெய்யில் வறுத்த சுண்டக்காய், தயிர் என விரத சாப்பாட்டினை தயார் செய்ய வேண்டும்.

1. அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும்.
2. வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.
3. அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
4. தொண்டை வலி மற்றும் குடல் புண் பிரச்சனையை சரி செய்ய அகத்திக் கீரை பயன்படுகிறது. மதிய வேளையில் இதை சாப்பிட்டு வந்தால் அல்சர் மற்றும் உடலில் உள்ள பித்தம் குறையும்.
5. பச்சை சுண்டைக்காயை  எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும். சுண்டக்காயில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது.
6.காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன், காயங்களையும், புண்களையும் ஆற வைக்கும்.
7. நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது. இது குளிர்ச்சித் தன்மை கொண்டது. கண்களுக்குக் குளிர்ச்சி தரும் செரிமானத்தைக் தூண்டும். வைட்டமின் சி சத்துக்கொண்ட நெல்லிக்காயை துவாதசி நாளில் பச்சடியாகவும் செய்து சாப்பிடலாம்.
First published:

Tags: Food, Vaikunda ekadasi