Home /News /lifestyle /

ஏகாதசி குழம்பு செய்வது எப்படி தெரியுமா?

ஏகாதசி குழம்பு செய்வது எப்படி தெரியுமா?

இந்த ஏகாதசி குழம்பில் 21 வகையான காய்கறிகளும் கீரைகளும் சேர்த்திருப்பதால் சத்துகள் நிறைந்ததாகவும் சுவை மிகுதியாகவும் இருக்கும்.

இந்த ஏகாதசி குழம்பில் 21 வகையான காய்கறிகளும் கீரைகளும் சேர்த்திருப்பதால் சத்துகள் நிறைந்ததாகவும் சுவை மிகுதியாகவும் இருக்கும்.

இந்த ஏகாதசி குழம்பில் 21 வகையான காய்கறிகளும் கீரைகளும் சேர்த்திருப்பதால் சத்துகள் நிறைந்ததாகவும் சுவை மிகுதியாகவும் இருக்கும்.

வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் அடுத்தநாள் துவாதசி நாளில் 21 வகை காய்கறிகளை சமைத்து சாப்பிடுகின்றனர். அதில் முக்கியமாக அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டக்காய் இடம்பெறுகிறது. அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். துவாதசி நாளில் சுவாமிக்கு நைவேத்யம் செய்து, ஒரு ஏழைக்கு தானம் செய்த பிறகு நாம் சாப்பிட வேண்டும்.. சரி வாங்க இந்த 21 வகை காய்கறி குழம்பு எப்படி வைக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

தேவையான பொருட்கள்:

அனைத்துப் பருப்பு வகைகள் சேர்த்து - 300 கிராம்,
21 வகை காய்கறி, கிழங்கு, கீரை வகைகள் சேர்த்து - 600 கிராம்.

அரைக்க...

தேங்காய் - 1/2 மூடி,

புளி - பெரிய எலுமிச்சை அளவு,

பச்சை மிளகாய் - 2,

தக்காளி - 2.

21 காய்கறிகளுடன் சேர்க்க...

நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1,

சின்ன வெங்காயம் - 10

நீளமாக கீறிய பச்சை மிளகாய் - 4,

தக்காளி - 3,

வெள்ளைப் பூண்டு - 3,

இஞ்சி - 2 இஞ்ச் அளவு,

சாம்பார் பொடி - 5 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

மாங்காய் - 1/4 துண்டு,

அரிநெல்லிக்காய் - 3,

பெரிய நெல்லிக்காய் - 1/2,

நார்த்தங்காய் - 1/4,

தனியா தூள் - 2 டீஸ்பூன்.

தாளிக்க...

நல்லெண்ணெய் - தேவைக்கு,

கடுகு - 2 டீஸ்பூன்,

உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 3,

கறிவேப்பிலை - சிறிது,

பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்.

தாளித்த பின் சேர்க்க வேண்டியவை

சர்க்கரை - 1 டீஸ்பூன்,

வெல்லம் - 1/2 டீஸ்பூன்,

கொத்தமல்லி இலை - சிறிது.

காய்கறிகள்


செய்முறை

துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு என அனைத்துப் பருப்புகளையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும். காலையில் இந்தப் பருப்புகளையும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். அனைத்து காய்கறி, கிழங்கு வகைகள், கீரை வகைகளை நறுக்கி வைக்கவும். இதனுடன் அரைத்த விழுது, காய்கறிகளுடன் சேர்க்கக் கொடுக்கப்பட்டவை அனைத்தையும் கலந்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.

மேலும் படிக்க... குழந்தைகளுக்கான காய்கறி சூப் - செய்முறை     

பின்னர் இதையும் வேக வைத்த பருப்புகளையும் கலந்து கொதித்து வரும்போது, சர்க்கரை, வெல்லம் சேர்க்கவும். பிறகு, தாளிக்க வேண்டியவற்றைத் தாளிக்க வேண்டும். அதன் பின்னர் கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும். இப்போது சத்தும் சுவையும் மிக்க ஏகாதசி குழம்பு ரெடி..

வைகுண்ட ஏகாதசி 2021 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...

குறிப்பு

இந்த 21 வகை காய்கறி குழம்பு ஆண்டுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசி விரதம் முடித்த மறுநாள் செய்யப்படுவதால் ஏகாதசி சாம்பார், ஏகாதசி குழம்பு எனச் சொல்லப்படுகிறது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Food, Vaikunda ekadasi

அடுத்த செய்தி