இஸ்லாமிய மக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தியாகத் திருநாள் ‘பக்ரீத்’ வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகத்தின் போதைகளின்படி இன்றைய நாளில் ஏழை எளியோருக்கு உதவிகளையும், உணவுகளையும் இஸ்லாமியர்கள் வாரி வழங்குகின்றனர். ரம்ஜானுக்கு பிரியாணியைப்போல், பக்ரீத் பண்டிக்கைக்கும் சில பாரம்பரிய உணவுகள் இருக்கின்றன. அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
1. அவாதி பிரியாணி
மன்னர் காலம் முதல் புகழ்பெற்ற பிரியாணியாக இருப்பது லக்னோ அவாதி பிரியாணி. குறிப்பாக, ஆங்கிலேயர் காலத்தில் அதிகம் விரும்பி சாப்பிடப்பட்ட இந்த பிரியாணி பக்ரீத் பண்டிகையின்போது செய்யப்படும் ஸ்பெஷல் உணவாகும். அரிசி உணவில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மட்டன் பீஸ்களை பார்ப்பவர்கள் வாயில் நிச்சயம் எச்சில் ஊறாமல் இருக்காது. குங்குமப் பூ பால் கொண்டு செய்யப்படும் அவாதி பிரியாணியை, தயார் செய்வதற்கு கூடுதல் நேரம் ஆகுமென்றாலும், காத்திருப்பதற்கு பலன் நிச்சயம் உண்டு.
தேவையான பொருட்கள்;
லவங்கப்பட்டை குச்சி -1,
8-10 கிராம்பு,
2-3 தேக்கரண்டி சீரகம்,
1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்,
2-3 தேக்கரண்டி கொத்தமல்லி, 1 தேக்கரண்டி மிளகு, 2 சோம்பு,
2-3 ஏலக்காய்,
3-4 பச்சை ஏலக்காய் (மட்டன் மரினேஷனுக்கு),
1/2 கிலோ மட்டன்
2-3 இஞ்சி-பூண்டு விழுது,
1 தேக்கரண்டி மஞ்சள்,
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
முந்திரி நட்ஸ் பேஸ்ட்,
கரம் மசாலா ஒரு சிட்டிகை,
4-5 தேக்கரண்டி தயிர்,
2-3 தேக்கரண்டி உப்பு
3 தேக்கரண்டி நெய்,
2-3 டீஸ்பூன் எண்ணெய்
2-3 கப் பால்,
குங்குமப்பூ ஒரு சிட்டிகை.
செய்முறை;
முதலில் மாசாலா பொருட்கள் அனைத்தையும் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை அரைத்துவிட வேண்டும். ஆட்டிறைச்சியுடன் இஞ்சி பூண்டு, மஞ்சள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். முந்திரி நட்ஸ் பேஸ்ட், கரம் மசாலா, தயிர் சேர்த்துக் கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், அந்த இறைச்சியை ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடுங்கள்.
குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு இறைச்சியை எடுத்து வெளியில் வைத்து உப்பு சேர்த்து கலக்குங்கள். கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அவற்றில் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருக்கும் இறைச்சியை போட்டு சமைக்கவும். அரை மணி நேரம் வேக வைத்த பின்பு, சமைத்த அரிசியுடன் இறைச்சியை அடுக்கவும். அதன் மேல் குங்குமப் பூ பாலை ஊற்றவும். அதனுடன் சிறிதளவு உப்பு, கரம் மசாலா, வறுத்த வெங்காயம், நெய் ஆகியவற்றை சேர்த்து மீண்டு கடாயில் மூடி குறைவான சூட்டில் வைத்துவிடுங்கள். அரைமணி நேரத்துக்கு பிறகு, உங்கள் பிரியாணி தயாராக இருக்கும்.
2. ஷமி கபாப்
ஒரு விருந்தை மகிழ்ச்சிகரமாக தொடங்குவதற்கு ’கபாப்’ -ஐ தவிர மிகச்சிறந்த உணவு இருக்க முடியுமா?. வாயில் எச்சில் ஊற வைக்கும் கபாப், சன்னா தால், மட்டன், ஆனியன், மிளகாய் உள்ளிட்டவைகளைக் கொண்டு ருசியாக செய்யப்படுகிறது. காஃபியுடன் சாப்பிடும் மிகச்சிறந்த ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம். காரமும், மொறுமொறுப்பும் இருக்கும் பாகிஸ்தான் உணவான ஷமி கபாப், பக்ரீத் பண்டிகைக்கான ஸ்பெஷல் உணவாக உள்ளது. பலரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
500 கிராம் மட்டன்,
1/4 டீஸ்பூன் சீரகம்,
1/4 டீஸ்பூன் பச்சை ஏலக்காய் தூள்,
1/2 தேக்கரண்டி நறுக்கிய பூண்டு,
10 ஏலக்காய்,
தேவைக்கேற்ப உப்பு,
1 வேகவைத்த முட்டை,
4 தேக்கரண்டி சனா பருப்பு,
1/4 டீஸ்பூன் மிளகு தூள்,
2 தேக்கரண்டி மிளகாய் தூள்,
1/2 தேக்கரண்டி இஞ்சி துண்டு,
1/2 தேக்கரண்டி கிராம்பு,
1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்,
தேவைக்கேற்ப தண்ணீர்
செய்முறை
மட்டன் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர், மிளகாய் தூள், சீரகம், கருப்பு மிளகு, பச்சை ஏலக்காய் தூள், சனா பருப்பு, பூண்டு, இஞ்சி, ஏலக்காய், கிராம்பு மற்றும் உப்பு சேர்க்கவும். பின்னர் பாத்திரத்தை மூடியை மூடி வேக வைக்க வேண்டும். தண்ணீர் ஆவியாகி இறைச்சி மென்மையாக மாறும் வரை வெப்பத்தை குறைத்து சமைக்கவும். கடாயை அடுப்பில் இருந்து இறக்கி, வெப்பத்தை ஆறும் வரை காத்திருக்கலாம் அல்லது குளிர வைக்கலாம்.
பின்பு, இதனை பேஸ்டாக அரைக்க வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி கரம் மசாலா மற்றும் முட்டையை சேர்க்கவும். அவற்றுடன், வெங்காயம், கொத்தமல்லி இலைகள் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை அளவு தட்டையாக உருண்டை பிடித்து, சூடான எண்ணெயில் போட வேண்டும். கபாப் பழுப்பு நிறமாக மாறியவுடன், சட்னி உடன் சூடாக பறிமாறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bakrid, Mutton Biryani