Eid Mubarak 2020 : ரமலான் ஸ்பெஷல் ரெசிபீஸ் : வீட்டிலிருந்து சிறப்பாக கொண்டாட இதுவே நல்ல வாய்ப்பு

வீட்டிலேயே சமைத்து குடும்பத்தோடு வீட்டிலேயே கொண்டாட இது சிறந்த வாய்ப்பு என பாசிடிவாக நினைத்துக்கொள்ளுங்கள்.

Eid Mubarak 2020 : ரமலான் ஸ்பெஷல் ரெசிபீஸ் : வீட்டிலிருந்து சிறப்பாக கொண்டாட இதுவே நல்ல வாய்ப்பு
ரமலான் ரெசிபி
  • Share this:
ரம்ஜான் வந்தாலே அது கொண்டாட்டத்தின் உச்சம் எனலாம். ஆனால் இந்த வருடம் லாக்டவுன் என்பதால் அத்தனை சிறப்பாக செலவுகள் செய்து கொண்டாட முடியாது. இருப்பினும் கவலை வேண்டாம். வீட்டிலேயே சமைத்து குடும்பத்தோடு வீட்டிலேயே கொண்டாட இது சிறந்த வாய்ப்பு என பாசிடிவாக நினைத்துக்கொள்ளுங்கள். அந்தவகையில் இந்த ரம்ஜானுக்கு சமைத்து அசத்த ரம்ஜான் ஸ்பெஷல் ரெசிபீஸ் உங்களுக்காக...



ஷீர் குர்மா 


தேவையான பொருட்கள் : பால் - 1 லிட்டர், சேமியா - 1 கப் , நெய் - 2 ஸ்பூன், முந்திரி , பாதாம் , பிஸ்தா, பேரிச்சை - தேவையான அளவு, ஏலக்காய் பொடி - ஒரு சீடிகை, சர்க்கரை - 1/2 கப், ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன், குங்குமப் பூ - 1/4 ஸ்பூன்

செய்முறை : நெய்யை நன்கு காய வைத்து நட்ஸுகளை வதக்கிக் தனியாக வைத்துவிடுங்கள். இதேபோல் சேமியாவையும் நன்கு உடைத்து நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். அதேசமயம் பாத்திரத்தில் பாலை நன்குக் காய்ச்சவும். நன்குக் காய்ந்ததும் வறுத்த சேமியாவை போட்டு கிளறவும். சர்க்கரை சேர்க்கவும். வெந்ததும் அணைத்துவிடவும்.பின் வறுத்து வைத்துள்ள நட்ஸ், ரோஸ் வாட்டர் , ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும். சுவையான ஷீர் குர்மா தயார்.

சிக்கன் கபாப் 

தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ, முட்டை - 1 , தனியா பொடி - 2 ஸ்பூன், மிளகாய் பொடி - 2 ஸ்பூன் , தந்தூரி கலர் - 1/2 ஸ்பூன் , சோள மாவு - 3 ஸ்பூன் , உப்பு, அரைத்த கொத்தமல்லி - 1/4 கப் தேவையான அளவு , எண்ணெய் - வறுக்க

செய்முறை : மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் பாத்திரத்தில் போட்டுக் கலக்கவும். ஒரு மணி நேரம் சிக்கன் கலவையை ஊற வைக்கவும். கடாயில் வறுக்க எண்ணெய் விட்டு கடாயில் எண்ணெய் நன்கு சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு நன்கு வறுக்கவும். நாவூறும் சிக்கன் கபாப் தயார்.



ஷாஹி சிக்கன் குருமா 

தேவையான பொருட்கள் : சிக்கன் 1/2 கிலோ , மிளகுப் பொடி - 1/4 ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 1 ஸ்பூன். இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கிளறி ஒரு மணி நேரம் தனியாக வைக்கவும். எண்ணெய் - 2 ஸ்பூன், சீரகம் - 1/2 tsp, வெங்காயம் - 1 , இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 tsp, கிராம்பு - 4, கறி பவுடர் - 3/4 tsp, கரம் மசாலாப் பொடி - 1/2 tsp, ஏலக்காய் - 1 , மிஅகு - 1/4 tsp, மிளகாய் தூள் - 1/4 tsp, பட்டை - 1 , சர்க்கரை - 1 tsp, கெட்டி தேங்காய் பால் - 1 கப் . தயிர் - 1/2 கப் மற்றும் உப்பு - தேவையான அளவு

செய்முறை : கடாயில் எண்ணெய் விட்டு மசாலாக்களைப் போட்டு வதக்கவும். வதங்கியதும் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மசாலாக்களையும் சேர்க்கவும். தற்போது அதை தனியாக எடுத்து ஆறவிடவும் வெப்பம் குறைந்ததும் மிக்ஸியில் மைய அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த பேஸ்ட் சேர்த்து வதக்கவும். தற்போது ஊற வைத்த சிக்கன் கலவையை சேர்க்கவும். ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். தேவையான அளவு உப்பு, தயிர் இறுதியாக தேங்காய் பால், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். குக்கர் இரண்டு விசில் வந்ததும் அணைத்துவிடவும். கொத்தமல்லி தழைத் தூவிப் பரிமாறவும்.



கச்சி தம் மட்டன் பிரியாணி 

தேவையான பொருட்கள் : மட்டன் - 1/2 கிலோ, பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ ( 10 நிமிடங்கள் ஊற வைக்கவும் ) பட்டை - 4 துண்டுகள், கிராம்பு - 8 , ஏலக்காய் - 4, இலை - 2, உப்பு - 3 tsp, தனியாப் பொடி - 2 tsp, தக்காளி - 2 , நெய் - 1/2 கப் , எலுமிச்சை சாறு - 1 tsp, பால் - 1/2 கப் , எண்ணெய் - 150 மில்லி
பிரியாணி பேஸ்ட் : புதினா - 1 கப், கொத்தமல்லி - 1 கப்., வெங்காயம் - 3, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 tsp, பச்சை மிளகாய் - 6 , தயிர் - 3/4 கப், தேங்காய் - 1/2 கப், கசகசா - 2 tsp

செய்முறை : குக்கரில் எண்ணெய் விட்டு அனைத்து மசாலாக்களையும் சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் , பச்சை மிளகாய் சேர்க்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும். அதோடு அனைத்துப் பொடிகளையும் சேர்த்து அதோடு அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட் மறும் உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்ததாக மட்டன் சேர்த்துக் கிளறவும். நன்கு வதங்கி மசாலா சேர்ந்ததும் தேங்காய் பால் மறும் தண்ணீர் சேர்க்கவும். அடுத்ததாக ஊற வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து 2 விசில் வந்ததும் அணைத்துவிடவும். திறக்கும்போது கொத்தமல்லி தழை தூவவும். அரிசியை தனியாக வேக வைத்து மசாலாவோடுக் கிளறினாலும் நன்றாக இருக்கும்.











லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





பார்க்க :

 

 
First published: May 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading