ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சிறந்த புரதத்திற்கும், எடை இழப்புக்கும் சாப்பிட வேண்டிய உணவு முட்டையா? பன்னீரா?

சிறந்த புரதத்திற்கும், எடை இழப்புக்கும் சாப்பிட வேண்டிய உணவு முட்டையா? பன்னீரா?

மாதிரி படம்

மாதிரி படம்

இவை இரண்டிலும் புரதத்தைத் தவிர, கால்சியம், பி 12 மற்றும் இரும்பு போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒருவர் தன் எடையைக் குறைக்கவோ அல்லது தசைகளை வலுவாக்கவோ விரும்பினால், புரதம் (protein-rich) நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். எலும்புகள், தசைகள் மற்றும் உடலின் பிற செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிப்பதால் புரதம் வாழ்க்கையின் கட்டுமான தொகுதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

அந்த வகையில் உயர் தரமான புரதத்தின் நல்ல ஆதாரங்களாக முட்டை (Eggs) மற்றும் பன்னீர் (Paneer) மிகவும் பிரபலமான உணவுகளாக விளங்குகின்றன. இவை இரண்டிலும் புரதத்தைத் தவிர, கால்சியம், பி 12 மற்றும் இரும்பு போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்களுக்கு, பன்னீர் என்பது புரதத்தின் முக்கிய மூலமாக உள்ளது. அதுவே அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய விருப்பம் உள்ளது. அப்படியானால் புரத சத்திற்கு எந்த உணவை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து காணலாம்.

முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்:

இது ஒரு சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது மற்றும் பல சுகாதார நன்மைகளுக்கு பெயர் பெற்றது. 44 கிராம் எடையுள்ள வேகவைத்த ஒரு முட்டையில் இடம்பெற்றுள்ள சத்துக்கள் பின்வருமாறு:

புரதம்: 5.5 கிராம்

மொத்த கொழுப்பு: 4.2 கிராம்

கால்சியம்: 24.6 மி.கி.

இரும்பு: 0.8 மி.கி.

மெக்னீசியம்: 5.3 மி.கி.

பாஸ்பரஸ்: 86.7 மி.கி.

பொட்டாசியம்: 60.3 மி.கி.

துத்தநாகம்: 0.6 மி.கி.

கொழுப்பு: 162 மி.கி.

செலினியம்: 13.4 மைக்ரோகிராம் (எம்.சி.ஜி).

முட்டைகள் வைட்டமின்கள் ஏ, பி, ஈ மற்றும் கே ஆகியவற்றின் வளமான மூலமாகும். மஞ்சள் கருவில் அதிக கலோரி உள்ளடக்கம் இருப்பதால், முட்டையின் மஞ்சள் பகுதி பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது என்ற உண்மையை அறியாமல் பெரும்பாலான மக்கள் அதை நிராகரிக்கின்றனர். தினமும் வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவதால் நன்மைகள் ஏராளம்.

பன்னீர் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்:

பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரை முட்டைகளைப் போலவே, வெவ்வேறு வழிகளில் உணவில் சேர்க்கலாம். பன்னீர் சாண்ட்விச், பன்னீர் கறிஅல்லது பன்னீர் துண்டுகளை சிறிது எண்ணெயில் வதக்கி, உப்பு சேர்த்து மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம். அந்த வகையில் 40 கிராம் குறைந்த கொழுப்புள்ள பன்னீரில் நிறைந்துள்ள சத்துக்கள் பின்வருமாறு:

நேற்று சாப்பிட்ட உணவால் வயிறு என்னமோ பண்ணுதா..? ஒருவேளை ஃபுட்பாய்சன் ஆயிடுச்சா..? தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!

புரதம்: 7.54 கிராம்

கொழுப்பு: 5.88 கிராம்

கார்ப்ஸ்: 4.96 கிராம்

ஃபோலேட்டுகள்: 37.32 மைக்ரோகிராம்

கால்சியம்: 190.4 மி.கி.

பாஸ்பரஸ்: 132 மி.கி.

பொட்டாசியம்: 50 மி.கி.

இது தவிர, பன்னீரில் வைட்டமின் பி 12, செலினியம், வைட்டமின் டி மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. பன்னீரில் பாலக் பன்னீர், பன்னீர் பட்டர் மசாலா ஆகியவற்றையும் செய்து சாப்பிடலாம்.

இரண்டில் புரதத்தின் சிறந்த ஆதாரம் எது?

முட்டை மற்றும் பன்னீர், இரண்டுமே அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஒரே மாதிரியான ஊட்டச்சத்து கலவையைக் கொண்டுள்ளன. இரண்டிலும் புரதத்தைத் தவிர, அவை வைட்டமின் பி 12, இரும்பு, கால்சியம் மற்றும் பல்வேறு வகையான வைட்டமின்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை நம்மில் ஆரோக்கியமான எடையை பராமரிப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இரண்டு உணவு பொருட்களும் தசைகளை உருவாக்குவதற்கும் எடை இழப்பு இலக்குகளை அடைவதற்கும் உதவுகின்றன. எனவே இரண்டு வகையான உணவுகளையும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சமைத்து சாப்பிடுங்கள். இரண்டுமே புரத்திற்கு சத்தான உணவுகள் என்பதால் இதில் வெற்றியாளர் எது என்பதை கணக்கிடுவது மிகவும் கடினம்.

First published:

Tags: Egg, Paneer