ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

முட்டை இருந்தாலே போதும்.. பரபர காலை நேரத்தில் 10 நிமிடத்தில் செய்ய சூப்பர் உணவு!

முட்டை இருந்தாலே போதும்.. பரபர காலை நேரத்தில் 10 நிமிடத்தில் செய்ய சூப்பர் உணவு!

சீஸ் முட்டை ரோல்

சீஸ் முட்டை ரோல்

Egg chess Roll | குழந்தைகளுக்கு காய்கறி, சீஸ் சேர்த்து முட்டை ரோல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முட்டை சீஸ் ரோல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் அனைவரும் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அதனை செய்து சாப்பிட வேலைக்கு செல்லும் போது நேரம் இருக்காது. காலை நேரங்களில் அவசர அவசரமாக செல்வோர், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவோர் இந்த சத்தான முட்டை உணவை செய்து கொடுக்கலாம். இந்த ரெசிபியை 10 நிமிடத்திலேயே செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள்

முட்டை - 5

வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம் - தலா 1

கோஸ் - சிறிது நறுகியது

வெங்காயத்தாள் - சிறிதளவு

வறுத்த தேங்காய்த் துருவல் - சிறிதளவு

சீஸ் - 25 கிராம்

மிளகுத் தூள் - சிறிதளவு

உப்பு - சிறிதளவு

மஞ்சள் தூள் - சிறிதளவு

செய்முறை :

 1. வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2. அத்துடன் வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3. சீஸை துருவிக்கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் கேரட், வெள்ளரிக்காய், கோஸ், வெங்காயம், கொத்தமல்லித்தழையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
5. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், வெங்காயத் தாளைச் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
6. தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டையை மெலிதாக ஊற்றி வெந்ததும் மேலே கலந்து வைத்துள்ள காய்கறிகளை வைத்து அவற்றின் மேல் மிளகுத் தூளைத் தூவ வேண்டும். 
7. பிறகு சீஸைத் துருவிச் சேர்த்து அப்படியே சுருட்டி, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இப்போது சூப்பரான முட்டை சீஸ் ரோல் தயார்.
First published:

Tags: Breakfast, Egg recipes, Food