காலையில் இடியாப்பம் செய்து மீந்து போய்விட்டதா.. கவலைய விடுங்கள். அதை அப்படியே மாலையில் முட்டை சேர்த்து மசாலா இடியாப்பம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து அசத்தலாம். இன்று முட்டை இடியாப்பம் செய்வது எப்படி என்பதை பற்றிதெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
இடியாப்பம் (உதிர்த்தது) - 2 கப்
முட்டை - 3
சின்ன வெங்காயம் - 50 கிராம்
நாட்டு தக்காளி - 3
பூண்டு - 6 பல்
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் லேசாக உப்பு போட்டு, அதோடு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள். அதை பெரிய முட்டை அடையை போல ஊற்றி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
2. தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள் (விரும்பினால் கால் டீஸ்பூன் கரம் மசாலாதூள் சேர்த்து), எல்லாவற்றையும் மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுங்கள்.
3. கடாயில் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்கு வதக்குங்கள். நன்கு எண்ணெய் கசிந்து வரும்போது, மீந்துபோன இடியப்பத்தை உதிர்தது நறுக்கிய முட்டை துண்டுகளையும் போட்டு, சுருளச் சுருளக் கிளறி இறக்குங்கள்.
4.இப்போது சூப்பரான முட்டை இடியாப்பம் ரெடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food