உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு ரெசிபி...

முட்டை ரெசிபி

இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சாப்பிட இந்த உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு சுவையாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.

  • Share this:
முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்யக்கூடிய சுலபமான குழம்பு வகை. சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பை எப்படி செய்வது என்பது பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க...

தேவையான பொருட்கள்

முட்டை – 4

சமையல் எண்ணெய் – 3 தேக்கரண்டி

சோம்பு/ பெருஞ்சீரகம் – ½ தேக்கரண்டி

கருவேப்பிலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 4

பெரிய வெங்காயம் – 2

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி தழை- சிறிதளவு

தக்காளி – 2

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மல்லித் தூள் – 2 தேக்கரண்டி

கரம் மசாலா – ½ தேக்கரண்டி

தேங்காய் விழுது அரைக்க தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய் – 3 தேக்கரண்டி

சோம்பு – ½ தேக்கரண்டிசெய்முறை

ஒரு வாணலியில் 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் சோம்பு, கருவேப்பிலை சிறிதளவு, 4 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அத்துடன் 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும் 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க... இறால் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி...?

இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும், பின்னர் இரண்டு தக்காளி பழங்களை மிக்ஸியில் அரைத்து வதக்கிய கலவையில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் குழம்பிற்கு தேவையான அளவு உப்பு, ½ தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க... கேரளா ஸ்டைல் வாழை இலை மீன் வறுவல் ரெசிபி...

தக்காளி நன்றாக வதங்கி சுருண்டு வந்தவுடன்,  மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்துக் அரைக்கவும்...

குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசனை போன பின்னர், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதே சமயத்தில் 4 முட்டைகளை எடுத்து மெதுவாக உடைத்து ஊற்றவும்.அதன் பின்னர் மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

லேசாக கிளறி விட்டு சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும். இப்போது சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு தயார்.

மேலும் படிக்க...மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?
Published by:Vaijayanthi S
First published: