Home /News /lifestyle /

World Breastfeeding Week 2021 | மார்பகங்களில் பால் கட்டுவதை (Breast Engorge) தடுப்பது எப்படி? இதிலெல்லாம் கவனம் தேவை!

World Breastfeeding Week 2021 | மார்பகங்களில் பால் கட்டுவதை (Breast Engorge) தடுப்பது எப்படி? இதிலெல்லாம் கவனம் தேவை!

ஊட்டச்சத்து மிகுந்த கீரைகள், காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக்கொள்வது சிறந்தது.

ஊட்டச்சத்து மிகுந்த கீரைகள், காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக்கொள்வது சிறந்தது.

ஊட்டச்சத்து மிகுந்த கீரைகள், காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக்கொள்வது சிறந்தது.

பெண்களுக்கு பால் குறைவாக சுரக்கிறது என்பது மாயை. இருப்பினும், ஒரு தாய்க்கு பால் சுரப்பது குறைவாக இருக்கிறது என்றால், அது உடல்ரீதியான சில பிரச்சனைகளின் வெளிப்பாடாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. மேலும், இதுகுறித்து குறிப்பாக எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், உணவு பழக்க முறைகளில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முறையற்ற உணவு பழக்கங்கள், தூக்கமின்மை ஆகியவை பால் சுரப்பை குறைக்க காரணமாக அமையலாம் என்பதால் தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரி, பால் கட்டிவிட்டால் என்ன செய்வது? அவ்வாறு பால் கட்டாமல் தடுக்கும் வழிகள் குறித்து பார்க்கலாம்.

மார்பகங்களில் பால் கட்டுவது ஏன்?

சரி, ஒரு தாய்க்கு தனது மார்பகங்களில் ஏன் பால் கட்டிவிடுகிறது என்பதை முதலில் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு சில காரணங்கள் உள்ளன-- குழந்தைக்கு பால் போதும் என நினைத்து தாய்ப்பாலை கொடுக்காமல் தள்ளிப்போடுவது, சரியான முறையில் குழந்தையை அணைத்து பாலூட்டாதது போன்றவை முக்கிய காரணங்கள். தாய்மார்களுக்கு மார்பகங்களில் பால் கட்டாமல் இருக்க முக்கிய பங்கு குடும்பச் சூழலுக்கு உண்டு. கேட்க வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் இதில் உண்மை உள்ளது. நல்ல எண்ணங்களும், மகிழ்ச்சியாக இருப்பதும் மார்பகங்களில் சரியான பால் உற்பத்தியை கொடுக்கும்.

Must Read | தாய்ப்பால் குறைவாக சுரக்க என்ன காரணம்? சரி செய்வது எப்படி?

அப்படி பால் கட்டும் பட்சத்தில், அதில் இருந்து மீள மார்பகங்களில் உத்தரம் கொடுக்க வேண்டும். அல்லது குழந்தைக்கு பால் கொடுக்கும் போது மார்பக பகுதியை மென்மையாக மசாஜ் செய்து கொடுத்தால் அவை மார்பகங்களில் வலியைக் குறைக்கும். இதில் எந்த முறையும் பலனளிக்கவில்லை எனில், மருத்துவரை அணுகுவது சிறந்தது. மேலும், இந்த சூழ்நிலைகளில் ப்ரெஸ்ட் பம்ஸ் (Breast Pumps) பயன்படுத்துவது சுலபமாக இருக்கும்.

பொதுவாக, ஒரு தாயின் எடைக்கும் தாய்ப்பால் சுரப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஊட்டச்சத்து குறைவாக இருக்கும் தாய்மார்களுக்கு நிச்சயமாக தாய்ப்பால் குறைவாகதான் சுரக்கும். இதில், இரத்த சோகையும் ஒரு காரணமாக அமைகிறது. சரி, இதில் இருந்து மீள ஊட்டச்சத்து மிகுந்த கீரைகள், காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக்கொள்வது சிறந்தது. இயற்கை தரும் எந்த உணவும் நமக்கு எதிரானது இல்லை. மேலும், முட்டை, மீன், கீரைகள், பருப்பு வகைகள் போன்ற புரதச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை தாய்ப்பால் சுரப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதிக களோரிகள் மிகுந்த எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு குழந்தை கொரோனாவால் பாதிக்கப்படும் பட்சத்தில் அதை எதிர்த்து போராடும் ஊட்டச்சத்து தாய்ப்பாலில் உள்ளதா?

பொதுவாக, பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் பொங்கி வழியும் என்பார்கள். அதாவது, குழந்தைகளை அவ்வளவு எளிதில் நோய்கள் நெறுங்காது என்பது அதற்கு அர்த்தம். எனவே, Anti-viral, Anti-bacterial போன்ற கூறுகள் தாய்ப்பாலில் அதிகம் இருப்பதால் அவை எல்லாம் ஒன்றிணைந்து குழந்தைக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றன. அந்த நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக கொரோனா போன்ற வைரஸ்களில் இருந்து குழந்தையை காக்கும் வல்லமை தாய்ப்பாலுக்கு உண்டு.
Published by:Archana R
First published:

Tags: Breast feeding diet, Breastfeeding, Mother Care, World breastfeeding week

அடுத்த செய்தி