முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Weight Loss | உடல் எடையை குறைக்கும் போது இவற்றை எல்லாம் கண்டிப்பாக உணவில் சேருங்கள்!

Weight Loss | உடல் எடையை குறைக்கும் போது இவற்றை எல்லாம் கண்டிப்பாக உணவில் சேருங்கள்!

உடல் எடையை குறைப்பது என்பது சாதாரணம் விஷயமல்ல. கடின உழைப்பு, தியாகம் , ஒருங்கினைந்த சிந்தனை இவை ஒன்று கூடும் போதுதான் அந்த பயணம் வெற்றியடையும்.  பலர் எளிமையான வழியில் உடல் எடையை குறைக்க முடியுமா என சிந்திக்கின்றனர். அவர்களுக்கு உதவுவதுதான் இந்த டயட் பிளான்கள்.

உடல் எடையை குறைப்பது என்பது சாதாரணம் விஷயமல்ல. கடின உழைப்பு, தியாகம் , ஒருங்கினைந்த சிந்தனை இவை ஒன்று கூடும் போதுதான் அந்த பயணம் வெற்றியடையும்.  பலர் எளிமையான வழியில் உடல் எடையை குறைக்க முடியுமா என சிந்திக்கின்றனர். அவர்களுக்கு உதவுவதுதான் இந்த டயட் பிளான்கள்.

உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்ய உங்கள் உணவில் மிக முக்கியமாக சேர்க்க வேண்டியது தண்ணீர் மற்றும் காய்கறியும் பழங்களும்.

தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்பாட்டில் ஈடுபடுவதால் தோல் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இருப்பினும், சில எளிய உதவிக்குறிப்புகள் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் முகத்தின் பிரகாசத்தை பராமரிக்கவும் உதவும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இதற்கான தீர்வு அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதால் கிடைப்பதில்லை, உண்மையில் உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களை செய்தாலே போதுமானது.

இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா விளக்கம் அளித்துள்ளார். அதில், எனக்குத் தெரிந்த பலரும் உடல் எடையை குறைப்பதாக தங்கள் பளபளப்பை இழக்கிறார்கள். ஆரோக்கியமான முறையில் உடலில் உள்ள கொழுப்பை குறைத்தால் உடலின் பளபளப்பு மற்றும் பிரகாசத்தை இழக்க வேண்டியதில்லை என்கிறார் மகிஜா. மேலும் நீங்கள் சரியாக உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் ஆரோக்கியமற்ற கொழுப்பை இழக்கவும், உண்மையில் உங்கள் தோல் மற்றும் முடியின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

மகிஜாவின் கூற்றுப்படி, உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்ய உங்கள் உணவில் மிக முக்கியமாக சேர்க்க வேண்டியது தண்ணீர், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள். மிகக் குறைந்த கலோரி உணவுகள் கொலாஜன் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, தினமும் ஒரு கிளாஸ் காய்கறி ஜூஸ் அருந்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் - 1/2

கேரட் - 1/2

பீட்ரூட் - 1/2

மிளகாய் - 1

தக்காளி - 1

தண்ணீர் - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

செய்முறை :

மேற்கண்ட அனைத்து பொருட்களையும் எடுத்து தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இந்த கலவையை வடிகட்டி அதனுடன் தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறைவதோடு உங்கள் சருமமும் பளபளப்பாகவும் இருக்கும்.

Also Read: உடலில் நீர்ச்சத்து வற்றாமல் தவிர்ப்பது எப்படி?- ஆச்சரியமூட்டும் வழிகள்!

வெள்ளரிக்காய் ஒரு குளிர்ச்சியான காய்கறியாகும். இது உங்கள் உடல் சூட்டை தணிக்கும். கேரட் பீட்டா கரோட்டின் ஒரு நல்ல மூலமாகும். இது உங்கள் சரும அழகை மேம்படுத்துகிறது. பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, அதே நேரத்தில் தக்காளியில் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிராக போராடும் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது. எனவே இந்த காய்கறி ஜூஸ் வைட்டமின் மற்றும் இரும்பு சத்தின் முழுமையான கலவையாகும். இது தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று மகிஜா தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Healthy Food, Healthy Life, Lifestyle, Weight loss