வெங்காயத்தின் இந்த 5 நன்மைகளை தெரிந்துகொண்டால் இனி உணவில் இருந்து ஒதுக்க மாட்டீர்கள்..!

ஆய்வுகளின் முடிவில் குறைந்த அளவு வெங்காயம் உட்கொண்டவர்களைக் காட்டிலும் அதிகளவு வெங்காயம் உட்கொண்டவர்கள் வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்படுவது 22% குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

ஆய்வுகளின் முடிவில் குறைந்த அளவு வெங்காயம் உட்கொண்டவர்களைக் காட்டிலும் அதிகளவு வெங்காயம் உட்கொண்டவர்கள் வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்படுவது 22% குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

  • Share this:
பொதுவாக சின்ன வெங்காயமோ பெரிய வெங்காயமோ சாம்பாரில் வெங்காயத்தை பார்த்தால் பலர் அதை தட்டின் ஓரத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு சாப்பிடுவதை பார்த்திருப்போம். ஆனால், அந்த வெங்காயத்தை ஒதுக்கிவைப்பதன் மூலம் உங்கள் உடம்பிற்கு சேர வேண்டிய வைட்டமின், மினரல்ஸ் போன்றவற்றை இழக்கிறீர்கள். மேலும், வெங்காயம் இதய கோளாறு, வாய் புண் மற்றும் தலைவலிக்கு நல்ல மருந்தாகும். வெங்காயத்தின் 5 முக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

ஊட்டச்சத்து:

வெங்காயத்தில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. மேலும், கலோரிகள் குறைவாகவும் வைட்டமின், மினரல் சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.

இதய ஆரோக்கியம்:

வெங்காயம் நம் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் அவை உடல் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றன. ட்ரைகிளிசரைட்களைக் குறைப்பதுடன் கொழுப்பின் அளவையும் குறைக்கின்றன. எனவே, இவை அனைத்தும் இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும்.

Also Read | உடல் எடை குறைப்பு முதல் ஆஸ்துமா கட்டுப்பாடு வரை… நாட்டு சக்கரையின் 6 நன்மைகள்..!

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்:

ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த ஆதாரம் வெங்காயம் ஆகும். அவை 25க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஃபிளாவனாய்டு (flavonoid) ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன.புற்றுநோயை தடுக்கும்:

பூண்டு மற்றும் வெங்காயம் போன்றவற்றை சாப்பிடுவது வயிறு மற்றும் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும். இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் குறைந்த அளவு வெங்காயம் உட்கொண்டவர்களைக் காட்டிலும் அதிக அளவு வெங்காயம் உட்கொண்டவர்கள் வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்படுவது 22% குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரத்த சக்கரை அளவு கட்டுப்படும்:

வெங்காயம் சாப்பிடுவது இரத்த சக்கரையை கட்டுப்படுத்த உதவும். இது நீரிழிவு நோய் அல்லது ப்ரீடயாபிடீஸ் ஆகிய நோய் உள்ளவர்களுக்கு பெருமளவில் உதவும்.
Published by:Archana R
First published: