• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் உணவகங்களில் சென்று சாப்பிடுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் உணவகங்களில் சென்று சாப்பிடுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

உணவகம்

உணவகம்

உணவகத்திற்கு சென்று சாப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அங்கு செல்வதற்கு முன்னதாக நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

  • Share this:
கொரோனா தொற்று பாதிப்பு இன்றளவும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், உலகம் மெதுவாக தொற்றுநோய்க்கு முந்தைய வாழ்க்கை நடைமுறைக்கு திரும்பி வருகிறது. தற்போது, பெரும்பாலான உணவகங்களில் மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. முன்பு தொற்றுநோய் காரணமாக உணவகங்களில் பார்சல் முறையில் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

ஏனெனில் கொரோனா பல லட்ச மக்களை தினசரி பாதித்து வரும் நிலையில், வீட்டிலேயே சாப்பிடுவது ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான விருப்பமாக இருக்கிறது. ஆனால் உங்களுக்கு பிடித்த உணவகத்திற்கு சென்று சாப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அங்கு செல்வதற்கு முன்னதாக நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவை என்ன என்பது குறித்து நாம் பின்வருமாறு காணலாம்.

Also Read: Lionel Messi | கண்ணீருடன் விடைபெற்றார் மெஸ்ஸி.. முடிவுக்கு வந்த 21 ஆண்டுகால பயணம்!

1. உணவகம் பற்றிய ஆராய்ச்சி:

உணவகத்தில் இருக்கையை முன்பதிவு செய்வதற்கு முன் உணவகத்தின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். உணவகம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதற்கான மதிப்புரைகளைப் படிக்க வேண்டும். மற்றும் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்க்க வேண்டும். ஊழியர்கள் முகக்கவசங்களை அணிந்திருந்தால் மற்றும் அவர்கள் அடிக்கடி தொடும் மேற்பரப்புகளை சுத்தப்படுத்துகிறார்களா? என்பதையும், அவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா என்ற தகவலைச் சேகரிக்கலாம். ஒரு உணவகத்தில் இந்த நெறிமுறைகள் பின்பற்றப்பட்டால் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.

2. முகக்கவசங்களை அணிந்து செல்லுங்கள்:

உணவு உண்ணும் நேரத்தைத் தவிர எல்லா நேரங்களிலும் நீங்கள் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும். உங்கள் ஆர்டர் அல்லது பில் வரும் வரை நீங்கள் காத்திருக்கும்போது, ​​முகக்கவசங்களை அணிவது நல்லது.

Also Read:  ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை தலையணைக்குள் வைத்து தூங்கினேன் – நீரஜ் சோப்ரா ஷேரிங்க்ஸ்

3. கையை சுத்தம் செய்யுங்கள்:

உங்கள் கைகளால் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்த்து, கைகளைக் கழுவி சுத்தப்படுத்தவும். மேசைகள் மற்றும் நாற்காலிகளை முடிந்தவரை தொடுவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு தொடர்பு இல்லாத கட்டண முறைகளைப் பயன்படுத்த முயற்சிக்கவும். நீங்கள் எந்தஒரு மேற்பரப்பையும் தொட்டால், உங்கள் கைகளை குறைந்தது 20 விநாடிகள் சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு கழுவவும் அல்லது உங்கள் கைகளை சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும். சானிடைசரில் குறைந்தது 60 சதவீத ஆல்கஹால் இருக்க வேண்டும்.

4. நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்

கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல நிறைய பேருடன் வெளியே செல்வதும் பாதுகாப்பானதாக இருக்காது. எனவே குறைந்த அளவு நண்பர்களுடன் வெளியே செல்லும் போது நீங்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்கள் என்பதை உறுதி செய்யவும். இது தொற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

5. சமூக விலகல்

உணவகங்களில் நீங்கள் காட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஒரு குழுவாக செல்லும் பொது 3 அல்லது 4 டேபிள்களை புக் செய்வது அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: