• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • எல்லாமே லிமிட் தான்.. கொய்யா பழத்தை கூட அதிகமாக சாப்பிட கூடாதாம்..

எல்லாமே லிமிட் தான்.. கொய்யா பழத்தை கூட அதிகமாக சாப்பிட கூடாதாம்..

கொய்யா

கொய்யா

கொய்யா பழத்தை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது இல்ல தெரியுமா ?

  • Share this:



    வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்திருப்பதால் நமக்கு நோய் ஏற்படுவதற்குக் காரணமான பாக்டீரியா, பூஞ்சைகள் அழிக்க ஏதுவாக நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. இந்த பழத்தில் அடங்கி இருக்கும் லைகோபினே, க்வர்ஸிடின், வைட்டமின் ‘சி’ மற்றும் பிற பாலிபினால்கள் மிக சிறந்த ஆக்சினேற்றங்களாக செயல்படுவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது. மேலும் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது. 



    நீரிழிவு நோயால் பதிக்கப்பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும். இது சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவை மேம்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இதய நோய் ஏற்படுவதில் மிகப் பெரிய காரணியாக இருக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொழுப்பினை குறைக்க கொய்யாப் பழம் பயன்படுகிறது. நல்ல கொழுப்பினை அதிகரிக்க செய்கின்றது.






    இன்னும் பலப்பல நன்மைகளை உடலுக்கு அளிக்கும் கொய்யாவை அளவுக்கு அதிகமாக சாப்பிடவும் கூடாது. கொய்யாவை நிறைய சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.அதிகம் கொய்யா சாப்பிடுவது உடலின் செரிமான மண்டலத்தை பாதிக்கிறது. ஏனென்றால் இதில் இருக்கும் பிரக்டோஸ் எனப்படும் ஒரு வகை சர்க்கரை அதிகம் நாம் சாப்பிடும் போது எளிதில் ஜீரணமாகாது.





    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலில் நிலையான ரத்த சர்க்கரை அளவு இருப்பது அவசியம். ஆனால் அதிகம் கொய்யாப்பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று சில சுகாதார ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.


    *கொய்யா சாப்பிட்ட பிறகு நீங்கள் எப்போதாவது வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டிருக்கிறீர்களா.? ஏனென்றால் சிலருக்கு கொய்யாவை சாப்பிட்டாலோ அல்லது அதிக அளவு சாப்பிட்டாலோ சில நேரங்களில் வயிற்றுப்போக்கு அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி ஏற்படும். கொய்யாவில் உள்ள விதைகளால் இது நிகழ்கிறது. பழங்களுக்கு அந்த விதைகள் இருப்பது அவசியம் என்றாலும், அதை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது அல்லது சிலருக்கு ஒத்து கொள்ளாத போது மேற்கண்ட கோளாறு ஏற்படும்.


    அதே போல இயற்கையாக காடுகளில் வளரும் பழங்கள் பாக்டீரியா மாசுபாட்டால் பாதிக்கப்படும். இதற்கு கொய்யாவும் விதிவிலக்கல்ல. சில வகை பாக்டீரியாக்கள் நீர் மற்றும் மண் வழியாக கொய்யா போன்ற பழங்களில் ஒட்டிக்கொள்ளும். பழத்தின் வெளிப்புறம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், பாக்டீரியாக்களால் உள்ளே செல்ல முடியும். ஆகவே, கொய்யாவை உட்கொள்ளும்போது எப்போதும் கவனமாக இருங்கள். அளவோடு சாப்பிட்டு நலம் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: