தினமும் மீன் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா..?

மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து கிடைக்கிறது. மேலும், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும்.

தினமும் மீன் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா..?
  • News18 Tamil
  • Last Updated: September 25, 2020, 8:37 PM IST
  • Share this:
மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன.

வங்காளம், அசாம் மற்றும் நாட்டின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்போதும் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளில் மீன் கட்டாயம் இருக்கும். அவர்கள் அதிகளவு மீன் உணவுகளை நேசிப்பதை நாம் சில சமயங்களில் வேடிக்கையாக பார்த்திருக்கலாம், இல்லை கேலி கூட செய்திருக்கலாம். ஆனால் மீன் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்பது உண்மையே. மீன் சாப்பிடுவதில் ஒரு திட்டவட்டமான சுவையான காரணி உள்ளது.

அது ராகு அல்லது பெட்கி போன்ற பெரிய மீன் வகையாக இருந்தாலும் சரி, கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற சிறிய மீன் வகையாக இருந்தாலும் சரி. ஒவ்வொரு வகையான மீன்களும் அதன் தனித்துவமான சுவையில் இருக்கும் என்பதில் மாற்றமில்லை. மீன்களை வறுத்து சாப்பிட்டாலும், வேகவைத்து சாப்பிட்டாலும், குழப்பு வைத்து சாப்பிட்டாலும் ருசி அருமையாக இருக்கும். மீன் சமைக்க மிகவும் எளிதானது. ஏனெனில் அதன் சதை பகுதிகள் சீக்கிரத்தில் வேகும் தன்மை கொண்டது.


நாம் மீன்களை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.,

நல்ல கொழுப்பு சத்து நிறைந்தது :

மற்ற உணவுகளை போல் இல்லாமல் கொழுப்பு வகை மீன்களான சால்மன், டிரௌட், மத்தி, டுனா மற்றும் கானாங்கெளுத்தி ஆகியவை உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. முக்கியமாக ஒமிகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதனால் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக அமைகிறது.ஆரோக்கியமான இதயத்திற்கு நல்லது :

தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது. கோழி, மட்டன் போன்ற மாமிச உணவுகளுக்கு பதிலாக அன்றாடம் மீன் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தின் மிகப்பெரிய எதிரியான கொலஸ்ட்ராலில் இருந்து தப்பிக்கலாம். மீன்களில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால், மீன் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

வைட்டமின் டி நிறைந்தது:

மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து கிடைக்கிறது. மேலும், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும். வைட்டமின் டி நம் உடலில் உள்ள அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. எனவே தினசரி உணவில் ஏதேனும் ஒரு வகை மீனை சேர்த்து கொள்ளுங்கள்.

மனசோர்வை குறைக்க உதவும்:

சிலருக்கு காரணடமின்றி மனசோர்வு ஏற்படும், அப்பொழுது மீன் சாப்பிடுவதனால் மனசோர்வு குறைகிறது மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் டிஹெச்ஏ முதல் வைட்டமின் டி வரை, மீன்களின் அனைத்து கூறுகளும் மனநலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவும். மீன் ஒரு இயற்கையான மன அழுத்த எதிர்ப்பு, மனச்சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்களை தடுக்க உதவுகிறது.

கெட்ட கொழுப்புகளை குறைக்கும்:

ஒமிகா 3 கொழுப்பு அமிலம் மீனில் அதிக அளவில் உள்ளதால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது.கெட்ட கொழுப்புகளை குறைப்பது மட்டுமின்றி கெட்ட கொழுப்புக்கள் சேர்வதையும் தடுக்கிறது. எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

நீரழிவு நோய்களை கட்டுப்படுத்தும் :

நீங்கள் தவறாமல் மீன் சாப்பிடுவதால் நீரிழிவு நோய், முடக்கு வாதம் போன்ற நோய்களின் தாக்கம் மிகக்குறைவாகவே காணப்படும். சாதாரணமாக மூட்டுகளில் ஏற்படும் நாள்பட்ட வீக்கத்தின் காரணமாகத் தான் முடக்குவாதம் ஏற்படுகிறது. இந்த முடக்குவாதத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க வேண்டும் என்றால் உணவில் மீனை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மீன்கள் பல முக்கிய ஊட்டச்சத்துக்களின் ஒரே ஒரு மூலமாகும். இது உங்கள் உடலில் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்கிறது. மேலும் அனைத்து வகையான பெரிய நோய்களுக்கும் எதிராக போராட உதவுகிறது.

இந்த நன்மைகளைத் தவிர, மீன் சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றம், தூக்கத்தின் தரம், சருமத்தின் தரம், செறிவு மற்றும் வீக்கத்தைக் குறைக்கும். இவ்வாறு நம் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய மீனை நம் உணவில் தினமும் சேர்த்துக் கொளவதில் தவறே இல்லை.
First published: September 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading