இன்று இந்தியாவில் fast food உணவுகளின் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளது. ஆன்லைன் ஆர்டரில் கூட இந்த உணவுகள்தான் கொடிகட்டிப் பறக்கின்றன. அதிக விலை கொடுத்து ருசி பார்க்கும் மக்களுக்கு அதன் சுவையில் இருக்கும் ஆபத்தை ஏனோ மறந்துவிடுகின்றனர். அதை நினைவுப் படுத்தவே இந்தக் கட்டுரை.
அதிக கொழுப்பு, சர்க்கரை, சீஸ் என எந்தவித ஊட்டச்சத்துகளும் இல்லாத இந்த fast food உணவுகள் வயிற்றை மட்டும் நிரப்புகின்றன. இதைத் தொடர்ந்து முறையற்ற வாழ்க்கைமுறை மேலும் ஆபத்தை நோக்கி நகர்த்துகிறது. அப்படி தொடர்ந்து அளவுக்கு அதிகமான fast food உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன பார்க்கலாம்.
செரிமானப் பிரச்னை : வயிறு கடுப்பு, நெஞ்சு எரிச்சல், வயிறு எரிச்சல் போன்றவை உருவாகி வயிறு செரிமானப் பிரச்னையை அடைகிறது. இதில் ஊட்டச்சத்து இல்லாததால் குறிப்பாக நார்ச்சத்து இல்லாததால் மலச்சிக்கல் உருவாகிறது.
மன அழுத்தம் : இது உடலை மட்டுமல்ல மூளையையும் பாதிக்கிறது. University of Montreal நடத்திய ஆய்வில் தொடர்ந்து ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் குறைவதைக் கண்டறிந்துள்ளனர். இதனால் மனச்சோர்வு, மன அழுத்தம் உண்டாவதாகக் கூறியுள்ளனர்.
காய்கறிகளே இல்லாத போது செய்து பாருங்கள் ’மசால்வடை குழம்பு’ - ரெசிபி இதோ..
சர்க்கரை அளவு சீரற்ற நிலை : fast food உணவுகளில் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் பயன்படுத்துவதால் இரத்ததில் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கத்துடன் அளவில் சீரற்று உள்ளது. இதனால் திடீரென பக்காவாதம், நரம்புத் தளர்ச்சி போன்ற அறிகுறிகளை சந்திக்க நேரிடும்.
சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பு : தினமும் fast food உணவுகளை சாப்பிடுவது கொழுப்பு அதிகரித்தல், குளுகோஸ் சீரற்று இருத்தல் போன்றவை சிறுநீரகத்தின் செயலை பாதிக்கும். கொழுப்புகள் நுரையீரலில் தேங்கி அதன் ஆற்றலைக் குறைக்கும்.
எனவே உடலுக்கு தீவிர ஆபத்தை உண்டாக்கக் கூடிய fast food உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து ஆரோக்கியமான சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.