ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஒரு நாளைக்கு இத்தனை முட்டை தான் சாப்பிட வேண்டுமாம்..!

ஒரு நாளைக்கு இத்தனை முட்டை தான் சாப்பிட வேண்டுமாம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

முட்டை அதிக புரதச்சத்து நிறைந்தது. குறிப்பாக அதன் மஞ்சள் கரு அதிக கொழுப்பு நிறைந்தது. இருப்பினும் அதனை அளவாக எடுத்துக்கொள்வதே சிறந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முட்டை என்றாலே ஆரோக்கியமானது என பலருக்கும் தெரியும். ஆரோக்கியம் என்பதற்காக அதிகமாக சாப்பிடுவதும் ஆபத்து. அந்த ஆபத்து எந்த அளவில் இருக்கிறது என்பதுதான் பலருக்கும் குழப்பம். அதாவது ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிட்டால் அதன் நன்மைகளைப் பெறலாம்..ஒருவேளை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. அதற்கான விடைதான் இந்த கட்டுரை.

  முட்டையில் விட்டமின் A, D மற்றும் B-12 நிறைவாக உள்ளது. அதோடு புரதச்சத்துக்கு முட்டைதான் சரியான உணவாக இருக்கும். உடல் எடையைக் குறைப்போருக்கு முட்டை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. அதேசமயம் கட்டுமஸ்தான உடலைப் பெறவும் முட்டை சாப்பிடுவார்கள். முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின் டி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மூளையின் சுருசுருப்பான இயக்கத்திற்கும் , ஞாபக திறன் அதிகரிக்கவும் முட்டை சாப்பிடலாம்.

  முட்டை இப்படி பல நன்மைகளை கொண்டிருந்தாலும் மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 2 முட்டை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். அதாவது வேக வைத்த முழுமையான முட்டையாக இருப்பின் 2 முட்டைக்கு மேல் சாப்பிடக்கூடாது. குறிப்பாக தினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் இருப்போர் இதை நினைவில் கொள்ள வேண்டும்.

  Read More : மொறு மொறு ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்யனுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

  நீரிழிவு நோயாளிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு முட்டையே போதுமானது என பரிந்துரைக்கின்றனர். காரணம் முட்டை அதிக புரதச்சத்து நிறைந்தது. குறிப்பாக அதன் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு நிறைந்துள்ளது. அதாவது ஒரு முட்டையில் 200 மில்லி கிராம் கொழுப்பு உள்ளதாம். ஆனால் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் கொழுப்பே போதுமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  அதிகமான முட்டையை சாப்பிடுவதால் கொழுப்பின் அளவு அதிகரித்து இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். இரத்தத்தில் நிறைவுற்ற கொழுப்பு அதிகரித்துவிடும். அவை உடலுக்கு கெட்ட கொழுப்பாக மாறி பல உடல் நல பாதிப்புகளை உண்டாக்கும். குறிப்பாக இதயம் தொடர்பான பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

  எனவே முட்டையை அளவாக சாப்பிட்டு அதன் ஆரோக்கியத்தை முழுமையாக பெறுங்கள்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Boiled egg, Egg, Health, Lifestyle