முன்பெல்லாம் காலையில் வேலைக்கு செல்ல , பள்ளிக்கு செல்ல நேரமாகிவிட்டது எனில் ஒரு வாழைப்பழம் ஒரு கிளாஸ் பாலும்தான் இன்ஸ்டன்ட் காலை உணவாக இருக்கும். இன்று பனானா மில்க் ஷேக்தான் அவசர நேரத்தில் பிரேக் ஃபாஸ்ட். பொருள் ஒன்றுதான் என்றாலும் அதை சாப்பிடும் முறைதான் மாறிவிட்டது.
டயட் இருப்போர், பாடி பில்டர்களும் பால், வாழைப்பழத்துடன் கொஞ்சம் புரோட்டீன் பவுடர் கலந்து ஷேக் செய்து குடிக்கிறார்கள். இப்படி நீங்கள் எந்த வகையில் பாலையும் , வாழைப்பழத்தையும் ஒன்றாக கலந்து சாப்பிடாலும் அது ஆயுர்வேதத்தின்படி தவறான கலவை என்கின்றனர். எப்படி தெரியுமா..?
பால் என்பது கால்சியம், புரதம் நிறைந்த ஆரோக்கியமான கொழுப்பு நிறந்த பானம். வாழைப்பழம் என்பது நார்ச்சத்து , பொட்டாசியம் , மெக்னீசியம் நிறைந்தது. இப்படி இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் ஒன்றுடன் ஒன்று இணையாதவையாக இருப்பதால் செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறனர். இரவு தூங்கும் முன் இந்த இரண்டையும் அடுத்தடுத்து சாப்பிட்டால் தூக்கம் தடைப்படும் என்கின்றனர். குறிப்பாக ஒவ்வாமை பாதிப்பு, ஆஸ்துமா, மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பவர்களுக்கு இந்த கலவை கட்டாயம் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
எனவே இவை இரண்டையும் சாப்பிடுவதாக இருந்தால் 20 நிமிடங்கள் இடைவெளிக்கு பின்பே சாப்பிட வேண்டும் என்கின்றனர். இதனால் அதன் பக்கவிளைவுகளை தவிர்க்கலாம்.
நாம் எந்த உணவை சாப்பிட்டாலும் அந்த உணவின் தன்மை மற்றும் சமைத்த விதத்தை வைத்தே செரிமான ஆற்றல் செயல்படும். அந்த வகையில் உங்கள் செரிமான மண்டலம் சீராக இயங்க வேண்டுமெனில் நாம் உண்ணும் உணவை சரியான பதத்திலும், சரியான ஊட்டச்சத்து கலைவையுடனும் இருக்க வேண்டும். அந்த வகையில் வாழைப்பழமும், பாலும் தவறான கவலையாகும். அவை செரிமானத்தில் கடுமையான பக்கவிளைவுகளை உண்டாக்கும்.
பாலையும் , வாழைப்பழத்தையும் ஒன்றாக சாப்பிட்டால் வரும் பிரச்சனைகள் :
சைனஸ் மூக்கடைப்பு
சளி
இருமல்
உடலில் தடிப்புகள்
வாந்தி
வயிற்றுப்போக்கு
வயிற்று வாயு வெளியேறுதல்
போன்ற பாதிப்புகளை சந்திக்க வேண்டும். இப்படி இந்த இரண்டும் உடலுக்கு நச்சு தன்மை கொண்டவையாக ஆயுர்வேதத்தில் பார்க்கப்படுகிறது. அது உடலின் சீரான செயல்பாட்டில் தாக்கத்தை விளைவிக்கிறது. இதனால் உங்களின் ஒட்டுமொத்த நாளையும் மோசமாக்கலாம்.
Also Read : பாலக்கீரையுடன் பனீரை சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு கேடு : விளக்கும் ஊட்டச்சத்து நிபுணர்..!
எனவே இதுபோன்ற பக்கவிளைவுகளை தவிர்க்க வேண்டுமெனில் பாலை முதலில் குடித்தால் வாழைப்பழத்தை 20 நிமிடங்கள் கழித்து சாப்பிடுங்கள். இப்படி இரண்டையும் சாப்பிட வேண்டுமெனில் ஒவ்வொன்றுக்கும் 20 நிமிட இடைவெளிக்கு பின் சாப்பிட்டால் பக்கவிளைவுகளை தவிர்க்கலாம் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.