ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மக்களே உஷார்... இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால் கேன்சர் வருமாம்..!

மக்களே உஷார்... இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால் கேன்சர் வருமாம்..!

இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால் கேன்சர்

இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால் கேன்சர்

உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) 2007ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில், சர்க்காடியன் இடையூறுகளை உள்ளடக்கிய ஷிப்ட் முறை, தூக்க முறைகளில் மாற்றம் இருக்கும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளவில் இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணமாக புற்றுநோய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. நுரையீரல், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகியவை ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களாகவும், மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை வாய் மற்றும் தைராய்டு புற்றுநோய் ஆகியன பெண்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் நமது வாழ்க்கை முறை, குறிப்பாக நமது உணவுமுறை, முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில் சாப்பிடும் உணவை விட எந்த நேரத்தில் உணவு எடுத்துக்கொள்கிறோம் என்பதும் புற்றுநோய் உருவாகும் அபாயத்தை தீர்மானிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சாப்பிடும் நேரம் Vs புற்றுநோய் அபாயம்:

பார்சிலோனா இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், உணவு உண்ணும் நேரத்தைப் பொறுத்து புற்றுநோயை உருவாக்கும் அபாயம் யாருக்கு அதிகம் என்பதை தீர்மானிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது. இரவு 9 மணிக்குப் பிறகு தொடர்ந்து சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கூட நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனே படுக்கைக்கு செல்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் 25 சதவீதம் அதிகம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

காரணம் என்ன?

உயிரியல் கடிகாரம் சர்க்காடியன் தாளத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை ஒழுங்குப்படுத்துகிறது. நாள் எப்படி 24 மணி நேரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறதோ?, அதேபோல் சர்க்காடியன் தளங்கள் என்பது, தூக்கம்-விழிப்பு, செரிமானம் ஆகியவற்றின் சுழற்சி சரியாகவும், தொடர்ந்து நடக்கவும் காரணமாக அமைகிறது.

உங்கள் உடல் கடிகாரம் சரியாகச் செயல்பட்டு இரவு 9 மணி அல்லது அதற்குப் பிறகு, சரியாக உறக்கம் வர வேண்டும். அந்த நேரத்திற்கும் பிறகு உடல் சுறுசுறுப்பாக செயல்படுவது சர்க்காடியன் தாளத்தை சீர்குலைத்து தூக்கம், பசி மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். இதற்கு காரணம் தவறான நேரத்தில் சாப்பிடக்கூடிய உணவு தான் என நிபுணர்கள் அடித்து கூறுகின்றனர்.

ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

இந்த ஆய்வு இரவு நேரங்களில் பணியாற்றாத 872 ஆண்கள் மற்றும் 1,321 பெண்களிடம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 621 ஆண்களுக்கு புரோஸ்டேட் மற்றும் 1,205 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது. நேர்காணல்கள் மற்றும் கேள்வித்தாள்களின் உதவியுடன், அவர்களின் உணவு, தூக்கம் மற்றும் காலவரிசை பற்றி அவர்களிடம் கேட்கப்பட்ட விடைகளின் அடிப்படையிலும் தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

Also Read : சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரக பாதை தொற்று பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

இரவு உணவிற்குப் பிறகு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நேரத்திற்கு பின் தூங்கச் செல்லும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 20 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் தாமதமாக உணவு எடுத்துக்கொள்ளும் ஆண், பெண் இருவருக்குமே புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 25 சதவீதம் அதிகம் உள்ளது.

உணவு உண்ணும் நேரம் புற்றுநோயின் அபாயத்தை ஏன் பாதிக்கிறது என்பதைத் தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், சில சான்றுகள் இது சீர்குலைந்த தூக்க முறை காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.

தூக்கத்தின் பங்களிப்பு:

உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) 2007ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில், சர்க்காடியன் இடையூறுகளை உள்ளடக்கிய ஷிப்ட் முறை, தூக்க முறைகளில் மாற்றம் இருக்கும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

புற்றுநோய்கான பிற ஆபத்து காரணிகள்:

புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவு, உடல் உழைப்பின்மை மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை புற்றுநோய் நோய்களுக்கான பிற ஆபத்து காரணிகளாக உள்ளன.

Also Read : “பிரவுன் சுகர் இருக்க பயமேன்”... நாட்டு சர்க்கரைக்குள் மறைந்திருக்கும் 6 நன்மைகள்..!

சில நோய்த்தொற்றுகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. "உலகளவில் 2018 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட புற்றுநோய்களில் சுமார் 13 சதவீதம் ஹெலிகோபாக்டர் பைலோரி, ஹூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV), ஹெபடைடிஸ் பி வைரஸ், ஹெபடைடிஸ் சி வைரஸ் மற்றும் எப்ஸ்டீன்-பார் வைரஸ் (2) உள்ளிட்ட புற்றுநோயைத் தூண்டும் நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக உள்ளதாக உலகளாவிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Cancer, Food