• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தினமும் தயிர் சாப்பிட்டால் நுரையீரல் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கலாம் : ஆய்வில் தகவல்

தினமும் தயிர் சாப்பிட்டால் நுரையீரல் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கலாம் : ஆய்வில் தகவல்

தயிர் சாப்பிடலாம். தயிரில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் காரத்தை குறைத்துவிடும்.

தயிர் சாப்பிடலாம். தயிரில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் காரத்தை குறைத்துவிடும்.

தயிரோடு நார்ச்சத்து நிறைந்த உணவையும் தினமும் கட்டாயம் உட்கொண்டால் 30 %புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் .

  • News18
  • Last Updated :
  • Share this:
    புதிகாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் தினமும் தயிர் சாப்பிடுவதால் நுரையீரல் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கலாம் என கண்டறிந்துள்ளது.

    வண்டர்பில்ட் பல்கலைக்கழகம் (Vanderbilt University) நடத்திய ஆய்வில் தினமும் தயிர் சாப்பிட்டோருக்கு நுரையீரல் புற்றுநோய் வளர்ச்சி 20 சதவீதமாகக் குறைந்தது தெரியவந்துள்ளது.

    தயிரோடு நார்ச்சத்து நிறைந்த உணவையும் தினமும் கட்டாயம் உட்கொண்டால் கூடுதலாக 10 சதவீதம் அதிகரித்து 30 %புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஆய்வானது ஜமா ஆன்காலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    தயிரில் உள்ள பாக்டீரியாக்கள், நோய் அழற்சி தடுப்பு பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளதால் அவை புற்றுநோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது. இதோடு பொதுவாக பால் பொருட்களில் உள்ள கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் k1 மற்றும் k2 ஆகியவை உடலுக்கு கூடுதல் ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
    இதோடு ஜீரண சக்தி அதிகரித்தல், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்தல் என பல வகைகளில் தயிரால் நன்மை கிடைக்கின்றன. எனவே உணவோடு புளிப்பில்லாத ஃபிரெஷ் தயிரை தினமும் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறது ஆய்வு.

    பார்க்க :

    மழைக்கால நோய்களில் இருந்து குழந்தைகளை தற்காத்துக் கொள்வது எப்படி?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: