நம்முடைய சமையலறையில் பூண்டு பேஸ்ட் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. விதவிதமான சுவையுடன் பல்வேறு உணவுப் பொருட்களை தயாரிப்பதற்கும் மூலப்பொருளாக இது பயன்படுகிறது. முக்கியமாக தென்னிந்திய உணவு வகைகளான குழம்பு வைப்பதற்கும், வாசனை தன்மையும் தக்க வைப்பதற்கும் பூண்டு பேஸ்ட் உதவுகிறது.
பூண்டு பேஸ்ட் தயாரிக்க பல்வேறு முறைகள் பின்பற்றப்பட்டாலும் அவை அனைத்தும் அதிக நேரம் செலவழித்து தயரிப்பதாகவே இருக்கும். எனவே தேவைப்படும் நேரத்தில் உடனடியாக பூண்டு பேஸ்ட் பயன்படுத்துவதற்கு அதனை முன்னரே தயாரித்து, சேமித்து வைப்பது தான் சரியான முறையாகும். எளிதான முறையில் பூண்டு பேஸ்ட் தயாரித்து சேமித்து வைக்கும் மூன்று வழிமுறைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
மைக்ரோவேவ் முறை:
ஒரு முழு பூண்டையும் எடுத்து அதன் கால் பகுதியை நறுக்கி விட்டு, பிறகு பூண்டு பற்களையும் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மேல் எஞ்சியுள்ள பூண்டு தோலையும் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது பூண்டை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு அதனோடு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு ஆலிவ் ஆயில் சேர்த்து, மீண்டும் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து அதனை மூடி வைக்க வேண்டும்.
இப்போது அந்த பாத்திரத்தை மைக்ரோவேவ் ஓவனில் எட்டு நிமிடங்கள் வரை வைத்து பிறகு அதனை வெளியே எடுத்து ஆற வைக்க வேண்டும்.
பிறகு பூண்டை நன்றாக பேஸ்ட் போல கலந்து , அதனை ஏதேனும் பாத்திரத்திலோ அல்லது காற்று புகாத டப்பாவிலோ போட்டு குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
ஊற வைக்கும் முறை:
பூண்டை உரிப்பதற்கு நீங்கள் சற்று சிரமபடுவதாக தெரிந்தால் இந்த ஊற வைக்கும் முறை உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். முழு பூண்டையும் உடைத்து தனித்தனியாக ஆக்கி ஒரு கிண்ணம் முழுவதும் நீரை நிரப்பி அதில் பூண்டு பற்களை போட்டு வைக்க வேண்டும்.
குறைந்தது 2 மணி நேரம் வரை மிதமான சூட்டுடைய நீரில் பூண்டு ஊறியதும் அதனை வெளியில் எடுத்து தோலை உரிக்கலாம். தண்ணீரில் ஊறியதால் தோல் மிக எளிதாக வரும்.
இப்போது பூண்டின் முனைகளை நறுக்கிவிட்டு பூண்டு பற்களை பேஸ்ட் போல செய்து கண்டெய்னர்களில் அடைத்து குளிர்சாதனப்பட்டியில் சேமித்து வைக்கலாம்.
நசுக்கி குலுக்கும் முறை:
இரண்டு முழு பூண்டை எடுத்துக்கொண்டு அதனை காய்கறி நறுக்கும் பலகையின் மீது வைத்து, நமது உள்ளங்கையில் பூண்டு பற்களின் மேல் மிதமான அழுத்தம் கொடுக்க வேண்டும். அதன் தோள்கள் இலகுவாக மாறும் வரை தேவையான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
பிறகு பூண்டு பற்களை ஒரு ஜாரில் வைத்து மூடி நன்றாக குலுக்க வேண்டும். இரண்டு நிமிடம் வரை குலுக்கிய பிறகு பூண்டின் மீது உள்ள தோல் மிக எளிதாக அகற்ற வசதியாக இருக்கும்.
Also Read : Garlic Benefits: பூண்டில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
பிறகு பூண்டு பற்களுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல உருவாக்கிக். கொள்ள வேண்டும். அந்த பேஸ்ட்டை காற்று புகாத டப்பாக்களில் அடைத்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cooking tips, Garlic