ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இப்படி வித்தியாசமான முறையில் தக்காளி சட்னி செய்து பாருங்கள்... டேஸ்ட் வேற லெவல்...

இப்படி வித்தியாசமான முறையில் தக்காளி சட்னி செய்து பாருங்கள்... டேஸ்ட் வேற லெவல்...

புதுவிதமான தக்காளி சட்னி

புதுவிதமான தக்காளி சட்னி

சுட சுட இட்லிக்கு சூடான புதுவிதமான இந்த தக்காளி சட்னியை பரிமாறினால் இரண்டு இட்லி கூடவே சாப்பிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இட்லி எல்லா காலத்திற்கும் அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. அந்த இட்லிக்கு செய்யப்படும் சட்னி இன்னும் கூடுதல் சுவையைத்தரும். அந்த வகையில் நாம் அடிக்கடி செய்து சாப்பிடும் தக்காளி சட்னியை கூடுதல் சுவையுடன் வேறுமாதிரி செய்வதற்கான செய்முறை தான் இப்போது நீங்கள் தெரிந்துக்கொள்ள போகிறீர்கள்.

தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய் 4

நல்லெண்ணெய் தே.அளவு

இஞ்சி ஒரு இன்ச்

பூண்டு பற்கள் - 8

சீரகம் - 1/2 ஸ்பூன்

புளி - 1 இன்ச்

நறுக்கிய தக்காளிப் பழம் - 4

மஞ்சள் தூள், உப்பு தே.அளவு

கொத்தமல்லி இலை தே.அளவு

செய்முறை :

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் வெட்டிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, தோல் உரித்த பூண்டு, சீரகம் மூன்று பொருட்களையும் போட்டு வதக்க வேண்டும்.

அதன் பின்பு நறுக்கிய தக்காளி பழம், உப்பு , மஞ்சள் தூள் போட்டு தக்காளி பழம் வதங்கும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு 1 இன்ச் அளவு புளியை இதில் சேர்க்க வேண்டும்.

பிறகு ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையை கொஞ்சம் காம்புகளோடு நறுக்கி இதில் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது இவை அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்தெடுத்து கடுகு தாளித்தால் போதும்.

சுட சுட இட்லிக்கு சூடான புதுவிதமான இந்த தக்காளி சட்னியை பரிமாறினால் இரண்டு இட்லி கூடவே சாப்பிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை..

First published:

Tags: Dinner Recipes, Food recipes