சைனாவில் மிகவும் பிரபலமான சிக்கன் உணவு வகையான சியாவ் லாங் பாவ் என்பது அருமையான சுவையுடன் அதிக நறுமணத்துடனும் தயாரிக்கப்படும் மோமோஸ் போன்று தோற்றமளிக்க கூடிய ஒரு உணவு வகையாகும்.
இந்தியாவில் அதிக அளவு பிரபலம் இல்லாத இந்த உணவு வகை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே பரவி வருகிறது. முக்கியமாக வட இந்திய பகுதிகளில் இந்த உணவு வகை தற்போது அதிகம் விரும்பப்படுகிறது. இந்த சிக்கன் ரெசிபியை நீங்கள் வீட்டிலேயே மிக எளிதாக தயாரிக்க முடியும். அதற்கான வழிமுறைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
குழம்பு தயார் செய்ய:
சிக்கன் விங்க்ஸ் - 1.5 கிலோ
வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி - 15 கிராம்
வெள்ளை மிளகுசோளம் - 10 கிராம்
செலரி தண்டு - 20 கிராம்
தண்ணீர் - 2.5 லிட்டர்
உப்பு தேவையான அளவு
பூரணத்திற்கு:
நறுக்கிய சிக்கன் - 150 கிராம்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
வெங்காயத்தாள் - 10 கிராம்
மாவிற்கு:
அனைத்து உபயோக மாவு - 70 கிராம்
கொதிக்க வைத்த நீர் - 70 மில்லி கிராம்
Also Read : சமையலுக்கு 'ரைஸ் பிரான் ஆயில்' பயன்படுத்துவது நல்லதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!
செய்முறை:
குழம்பிற்காக எடுத்து வைத்துள்ள அனைத்து மூல பொருட்களையும் ஒன்றாக ஒரு பானையில் போட்டு அதில் குளிர்ந்த நீரை ஊற்றி மூடி வைத்துவிட வேண்டும்.
பிறகு அதனை நன்றாக கொதிக்க விட்டு கொதிக்க ஆரம்பித்த பின்பு அடுப்பின் தீயை சிம்மில் வைக்கவும். அதன் பிறகு இரண்டரை மணி நேரம் வரை பானையை திறந்து வைக்கவும்.
இப்போது நன்றாக சூடு தாங்கக்கூடிய ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வடிகட்டியை வைத்து நாம் தயார் செய்து வைத்துள்ள அந்த குழம்பை வடிகட்டியின் மூலம் கிண்ணத்தில் வடிகட்ட வேண்டும். வடிகட்டியில் தங்கி உள்ளதை கொட்டி விடலாம்.
தற்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மீண்டும் பாத்திரத்தை மூடி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடலாம்.
Also Read : வீட்டில் கேஸ் அடுப்பை இப்படி சுத்தம் செய்யுங்க.. எப்போதும் புதுசு போல் ஜொலிக்கும்..!
இப்போது பூரணத்திர்காக வைத்திருக்கும் மூலப் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து அவற்றை குளிர்சாதனப்பட்டியில் வைத்து விடவும்.
பிறகு மாவை தயார் செய்வதற்காக நாம் எடுத்து வைத்துள்ள அனைத்து உபயோக மாவுடன் சிறிதளவு நீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். இப்போது அதனை ஒரு துணியை கொண்டு மூடி 30 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விடவும்.
தற்போது நாம் வடிகட்டி வைத்துள்ள குழம்பை ஜெல்லி போன்ற பதத்திற்கு வந்தவுடன் குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து விடலாம்.
அதனோடு நாம் நிரப்புவதற்காக தயார் செய்து வைத்துள்ள கலவையை அதில் போட்டு கலந்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய சிறிய உருண்டைகளாக 10 கிராமம் அளவிற்கு வருமாறு தயார் செய்து வைக்கவும்.
Also Read : குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து.. ஈசியா செய்யலாம் மக்ரோனி சூப்!
மூன்றிலிருந்து நான்கு அங்குலம் விட்டத்திற்கு வரும் அளவு உருண்டைகளை தயார் செய்தால் போதுமானது. இப்போது ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நாம் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை நடுவில் வைத்து மாவின் முனைகளை நன்றாக மடித்து விடலாம்.
நான்கு முனைகளையும் ஈரப்படுத்தி பிறகு அவற்றை நன்றாக மடித்து முழுவதுமாக மூடுமாறு செய்ய வேண்டும்.
Also Read : சுவையான தேங்காய் போளி செய்வது எப்படி?
கிட்டத்தட்ட மூடிய பணப்பையின் வடிவத்திற்கு கொண்டு வந்தவுடன், அவற்றை ஆறிலிருந்து ஏழு நிமிடங்கள் வரை அவிக்க வேண்டும். அவ்வளவுதான் உணவு தயாராகி விட்டது. மாவு சிதைந்து விடாமல் அனைவருக்கும் பரிமாறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food recipes, Lifestyle, Supper Foods