ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்த ஒரு குழம்பு பேஸ்ட் போதும்..! டக்குனு 20 வகையான குழம்புகள் செய்யலாம்

இந்த ஒரு குழம்பு பேஸ்ட் போதும்..! டக்குனு 20 வகையான குழம்புகள் செய்யலாம்

இன்ஸ்டாண்ட் பேஸ்ட் ரெசிபி

இன்ஸ்டாண்ட் பேஸ்ட் ரெசிபி

ரெடிமேட் மசாலா எமர்ஜென்சி சமயங்களில் இப்படி ரெடிமேட் பேஸ்ட் செய்து வைத்துக்கொள்வது நல்லது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வேலைக்குச் செல்லும் பெண்கள் அல்லது திடீர் உடநிலை சரியில்லாத போது என உங்களுக்கான எமர்ஜென்சி சமயங்களில் இப்படி ரெடிமேட் பேஸ்ட் செய்து வைத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் பல வகையான குழம்பு, கிரேவி வகைகளுக்கு உதவும் வகையில் இந்த மசாலா பேஸ்டை செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

  Read More : மொறு மொறு ஃபிரென்ச் ஃபிரைஸ் செய்யனுமா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

  தேவைப்படும்போது பட்டர், பட்டை , இலவங்கம், வெங்காயம் சேர்த்து வதக்கி பின் இந்த பேஸ்டை சேர்த்து பன்னீர் மசாலா, சன்னா மசாலா, மஷ்ரும் ஃபிரை, குடைமிளகாய் மசாலா, உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா என பல வகையான குழம்பு வகைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இவை அனைத்தும் சப்பாத்தி , உணவுக்கும் சைட் டிஷாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் இந்த இன்ஸ்டன்ட் பேஸ்ட் உதவியாகவும் இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாமா..?

  தேவையான பொருட்கள் :

  எண்ணெய் - 1/2 கப்

  பட்டை - 2 துண்டு

  ஏலக்காய் - 3

  கிராம்பு - 1 tsp

  சீரகம் - 1tsp

  பிரிஞ்சு இலை - 1

  வெங்காயம் ( நறுக்கியது ) - 500 கிராம்

  பூண்டு - 30 கிராம்

  இஞ்சி - 30 கிராம்

  உப்பு - 1 tsp

  தக்காளி ( நறுக்கியது ) - 1 கிலோ

  ஊற வைக்க :

  முந்திரி - 1/4 கப்

  பூசணி விதை - 1/4 கப்

  சமைக்க :

  எண்ணெய் - 1/4 tsp

  மஞ்சள் - 1 tsp

  மிளகாய் தூள் - 3 tbsp

  கரம் மசாலா - 1tsp

  சீரகத்தூள் - 1tsp

  தனியா தூள் - 3 tbsp

  செய்முறை :

  முதலில் முந்திரி மற்றும் பூசணி விதைகளை 15 நிமிடத்திற்கு ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
  கடாயில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சு இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
  பின்னர், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். வெங்காயம் கண்ணாடி போல் வரும் வரை வதக்குங்கள். பின் உப்பு, தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
  தக்காளி குழைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அவற்றை ஆற வையுங்கள் சூடு தணிந்ததும் மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
  அடுத்ததாக ஊற வைத்த முந்திரி , பூசணி விதையையும் பேஸ்ட் போல் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
  பின்னர், கடாய் வைத்து எண்ணெய் விட்டு கொடுக்கப்பட்டுள்ள தூள் வகைகளை எல்லாம் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்துக்கொள்ளுங்கள். நன்கு கலந்துவிட்டு தட்டுப்போட்டு மூடி விடுங்கள். 20 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். பின் திறந்து பார்க்கும்போது எண்ணெய் பிரிந்து வந்திருக்கும்.
  அடுத்ததாக முந்திரி பேஸ்டை சேர்த்து கிளறிவிடுங்கள். மீண்டும் 15 நிமிடத்திற்கு வதக்குங்கள். அப்போது பேஸ்ட் இன்னும் நன்கு சுருங்கி எண்ணெய் நன்கு பிரிந்து வரும். இப்போது அடுப்பை அணைத்துவிடுங்கள்.
  அதை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி ஆறியதும் இறுக்கமான டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.அவ்வளவு தான் இன்ஸ்டாண்ட் பேஸ்ட் ரெடி!
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Food, Food recipes, Health