ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ’கேரட் பாயாசம்’ - சிம்பிள் ரெசிபி டிப்ஸ் இதோ உங்களுக்காக!

குளிர்காலத்தில் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ’கேரட் பாயாசம்’ - சிம்பிள் ரெசிபி டிப்ஸ் இதோ உங்களுக்காக!

கேரட் பாயாசம்

கேரட் பாயாசம்

கேரட்டில் உள்ள இயற்கையான இனிப்புத்தன்மையுடன் நெய்,சர்க்கரை சேர்க்கும் போது உங்களுக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்கும். இதோடு குளிர்காலத்தில் நம் பசியைக் கட்டுப்படுத்துவதற்கும், உடலில் தேவையற்ற கலோரிகளை எடுத்து கொள்வதையும் தடுக்க உதவியாக உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குளிர்காலம் ஆரம்பிச்சாச்சு… இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே பலருக்கு சுத்தமாகப் பிடிக்காது. இந்த நேரத்தில் குளிருக்கு இதமாக ஏதாவது நொறுக்குத்தீனிகள் செய்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் தோன்றும். இதனால் உடல் எடை அதிகரிப்பதோடு, பல உடல் நலப்பிரச்சனைகளையும் நாம் சந்திக்க நேரிடும். அதிலும் மற்ற சீசன்களை விட குளிர்காலத்தில் இயல்பாகவே பசி அதிகமாக எடுக்கும் என்பதால்அளவுக்கு அதிகமாக நாம் சாப்பிட்டு விடுவோம்.

சிலருக்கு காரமான பலகாரங்கள் பிடித்தமானதாக இருக்கும். ஒரு சிலருக்கோ இனிப்பு பலகாரங்கள் மிகவும் பிடிக்கும். எனவே இனிப்புப் பிரியர்கள் இனி உங்களது உடல் எடையைக் கட்டுப்பாடோடு வைத்துக்கொள்ளுவதற்கு இந்த கேரட் பாயாசம் ரெசிபியை தேர்வு செய்யலாம். இது நிச்சயம் உங்களது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக…

கேரட் என்பது அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று. அதிலும் குளிர்காலங்களில் இதன் விளைச்சல் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எனவே எவ்வித இடையூறும் இல்லாமல் நீங்கள் கேரட்டை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், சர்க்கரை, நார்ச்சத்துக்கள், கொழுப்புச்சத்து ஆகிய முதன்மை ஊட்டச்சத்துக்களும் அவற்றோடு வைட்டமின் ஏ, வைட்டமின் கே1, வைட்டமின் பி6, பயோடீன், பொட்டாசியம் ஆகிய வைட்டமின்களும் மினரல்களும் உள்ளதால் என்ன செய்து சாப்பிட்டாலும் உங்களது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

ஆனால் சில குழந்தைகள் கேரட் சாப்பிடுவதற்கு அடம்பிடிப்பார்கள். இனி உங்களுக்கு இந்த கவலை வேண்டாம். வழக்கமான பால் பாயாசத்திற்குப் பதிலாக கேரட்டில் குழந்தைகளுக்குப் பிடித்தமான கேரட் பாயாசம் நீங்கள் மேற்கொள்ளலாம்.

உடலுக்கு ஆரோக்கியமான கேரட் பாயாசம் ரெசிபியை நீங்களும் இனி ட்ரை பண்ணிப்பாருங்கள். பொதுவாக வட இந்தியாவிலும், கேரளத்திலும் முக்கிய பண்டிகையின் போது இந்த கேரட் பாயாசம் சமையலில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

கேரட் பாயாசம் செய்முறை:

முதலில் கேரட்டை வேகவைத்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, உங்களுக்குத் தேவைப்பட்டால் முந்திரி,பாதாம் போன்ற பருப்பு வகைகளைச் சேர்க்கவும்.
இதனையடுத்து வேகவைத்த கேரட்டை சிறிது நேரம் அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் பால் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். நன்றாக கொதித்து வந்ததும் அதனுடன் சர்க்கரை சேர்க்கவும். இப்போது உங்களுக்கு சுவையான கேரட் பாயாசம் ரெடியாகிவிட்டது.
கேரட்டில் உள்ள இயற்கையான இனிப்புத்தன்மையுடன் நெய்,சர்க்கரை சேர்க்கும் போது உங்களுக்குக் கூடுதல் சுவையைக் கொடுக்கும். இதோடு குளிர்காலத்தில் நம் பசியைக் கட்டுப்படுத்துவதற்கும், உடலில் தேவையற்ற கலோரிகளை எடுத்து கொள்வதையும் தடுக்க உதவியாக உள்ளது.
First published:

Tags: Carrot Recipes, Sweet recipes