ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

’தந்தூரி ஆலு டிக்கா’ ரெசிபியை எளிதாக செய்வதற்கான செய்முறை இதோ!

’தந்தூரி ஆலு டிக்கா’ ரெசிபியை எளிதாக செய்வதற்கான செய்முறை இதோ!

தந்தூரி ஆலு டிக்கா

தந்தூரி ஆலு டிக்கா

உருளைக்கிழங்கை வேகவைத்து அதை மேரினேட் செய்த பிறகு, அதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவங்களாக உருட்டி கொள்ளவும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தந்தூரி ஆலு டிக்கா என்பது ஒரு பிரபலமான ரெசிபியாகும். இது ஒரு சுவையான வட இந்திய ரெசிபி என்பதால் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த ருசியான ரெசிபியை கிட்டி பார்ட்டிகள், பெர்த்டே நிகழ்ச்சிகள் அல்லது கேம் நைட்ஸ் போன்ற சந்தர்ப்பங்களில் தயார் செய்தால் எல்லோருக்கும் பிடிக்கும். மேலும் எல்லா வயதினரும் இதை சாப்பிட முடியும். வேகவைத்த உருளைக்கிழங்கு, தயிர் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட இந்த எளிய ரெசிபி மிகவும் சுவையானது. இந்த அற்புதமான ரெசிபி உங்கள் பசியையும் இரட்டிப்பாக்குகிறது. புதினா சட்னி, புளி சட்னி அல்லது நீங்கள் விரும்பும் வேறு ஏதேனும் சட்னி உடன் இதை பரிமாறலாம். ருசியான தந்தூரி ஆலு டிக்கா ரெசிபியை எளிதாக செய்வதற்கான செய்முறையை பற்றி இனி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

10 -தோல்கள் கொண்ட சிறிய உருளைக்கிழங்கு

1/4 டீஸ்பூன் -கரம் மசாலா தூள்

1/4 டீஸ்பூன் - கொத்தமல்லி தூள்

1/2 டீஸ்பூன் - எலுமிச்சை சாறு

தேவைக்கேற்ப - உப்பு

1/4 கப் - தயிர்

1/4 டீஸ்பூன் - சிவப்பு மிளகாய் தூள்

1/2 டீஸ்பூன் கசூரி மேத்தி தூள்

2 டீஸ்பூன் - சமையல் எண்ணெய்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி கொண்டு அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும். இதில் சிறிது உப்பு சேர்க்கவும். சிறிது நிமிடம் கொதிக்க விடவும், பின்னர் அதில் உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்க விடவும். உருளைக்கிழங்கு வெந்த பிறகு, அவற்றை அடுப்பில் இருந்து இறக்கி, தண்ணீரை வடிகட்டி, ஒவ்வொரு உருளைக்கிழங்கையும் இரண்டாக நறுக்கவும். அடுத்து, வேகவைத்த உருளைக்கிழங்கை ஒரு பெரிய கிண்ணத்தில் மாற்றி, அதில் தயிர் சேர்த்து கொள்ளவும்.

அடுத்து, அதில் சிவப்பு மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி தூள், கரம் மசாலா மற்றும் கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்க்கவும். இதை நன்கு கலந்து உருளைக்கிழங்கு கலவையை சிறிது நேரம் ஊற விடவும். உருளைக்கிழங்கை வேகவைத்து அதை மேரினேட் செய்த பிறகு, அதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவங்களாக உருட்டி கொள்ளவும். அதன் பிறகு, ஒரு நான்-ஸ்டிக் பானை மிதமான தீயில் சூடாக்கி, அதில் சிறிது சமையல் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

Also Read : பாரம்பரிய பாட்டி சமையல்... நாவூறும் நாட்டுக்காய் கூட்டு... எளிதில் செய்ய ரெசிபி..!

எண்ணெய் சூடானதும், அதில் மேரினேட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கைச் சேர்த்து, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். ஓரளவு வருத்ததும், இவற்றை ஒரு தட்டில் மாற்றி, இவற்றின் மீது சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து விடவும். அவ்வளவு தான், மனமும் ருசியும் நிறைந்த தந்தூரி ஆலு டிக்கி தயாராகி விட்டது. இதை வீட்டில் உள்ள அனைவருக்கும் சூடாகப் பரிமாறலாம். முக்கியமாக புதினா சட்னி, புளி சட்னி அல்லது நீங்கள் விரும்பும் வேறு ஏதேனும் சட்னியுடன் தொட்டு சாப்பிடலாம். மிக அருமையான சுவையை இது தரும்.

First published:

Tags: Food recipes, Potato recipes