Home /News /lifestyle /

Easter Recipe 2022 | ஈஸ்டர்க்கு இந்த மாதிரி முட்டை பிரியாணி செய்து பாருங்கள்...

Easter Recipe 2022 | ஈஸ்டர்க்கு இந்த மாதிரி முட்டை பிரியாணி செய்து பாருங்கள்...

முட்டை பிரியாணி

முட்டை பிரியாணி

Easter Egg Briyani | ஈஸ்டர் முட்டைகள் கல்லறையிலிருந்து இயேசுவின் தோற்றத்தையும் உயிர்த்தெழுதலை குறிக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் அன்று கிறிஸ்துவர்கள் முட்டையை செய்யாமல் இருக்கமாட்டார்கள்...அவர்களுக்காகவே முட்டை பிரியாணி இந்த ரெசிபி

மேலும் படிக்கவும் ...
ஈஸ்டர் பண்டிகையில் மிக முக்கியமாக இடம்பெறும் ஒரு பொருள் என்றால் அது ஈஸ்டர் முட்டைதான். ஆரம்பத்தில் மக்கள் சாதாரண கோழி முட்டைகளில் வெவ்வேறு வண்ணங்களை பூசி பயன்படுத்தினர். இன்று இந்த பதிவில் நாம் ஈஸ்டர்க்கு முட்டை பிரியாணி ஸ்பெஷலாக எப்படி செய்வது என தெரிந்துக்கொள்ளலாம்... 

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 3

தயிர் - 1 கப்

எண்ணெய் - அரை கப்

நெய் - கால் கப்

உப்பு - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 4 டீஸ்பூன்

அரைக்க தேவையான பொருட்கள்:

பட்டை - 2

லவங்கம் - 2

ஏலக்காய் - 6

பச்சை மிளகாய் - 5

புதினா - ஒரு கைப்பிடி

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

உடல் எடை குறைக்க உதவும் : உடல் இயக்கத்திற்கு தேவையான ஆற்றல் முட்டையில் இருந்து கிடைத்து விடுவதால், மாவுச்சத்து உணவுகளை நீங்கள் பெரிதும் குறைத்துக் கொள்ளலாம். மேலும், முட்டை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு எளிதில் கிடைக்கும். இதனால், மற்ற உணவு அளவுகள் குறையும் என்ற நிலையில், எடையை குறைக்க இது உதவும்.


செய்முறை:

1. வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியைக் நன்றாக கழுவி ஊறவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

2. முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள். அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் ஊற்றி சுட்டெடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.

3. அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கவும்.

4. எண்ணெய் மேலே வரும் போது, ஒரு கப் வெந்நீர் விட்டு தளதளப்பாக இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள்.

5. இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி ‘தம்’ போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும். சூப்பரான முட்டை பிரியாணி தயார்.

குறிப்பு: தேவைப்பட்டால் 4 முதல் 5 முட்டையை வேக வைத்து அதனை உறித்து பிரியானியில் சேர்த்துக் கொள்ளலாம். டேஸ்டியக இருக்கும்...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Biriyani, Egg recipes, Food

அடுத்த செய்தி