Easter 2021: ஈஸ்டர் பண்டிகையில் முக்கிய பங்கு வகிக்கும் இனிப்புகள் - காரணம் என்ன தெரியுமா?

கோப்புப் படம்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

  • Share this:
கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஈஸ்டரும் (Easter) ஒன்றாகும். பாஸ்கல் பௌர்ணமிக்குப் (Paschal Full Moon) பிறகு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு, பாஸ்கல் பௌர்ணமி மார்ச் 28ம் தேதி நிகழ்ந்தது. அதனடிப்படையில் ஏப்ரல் 4ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். புனித பைபிளின் படி, புனித வெள்ளி நாளில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். அவரது கடைசி இரவு உணவிற்குப் பிறகு அவர் ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அன்றைய தினம் தான் மவுண்டி (Maundy Thursday) வியாழக்கிழமை என நினைவு கூறப்படுகிறது.

இதையடுத்து மூன்றாம் நாள், இயேசு கிறிஸ்துவின் சீடர்களும், அவரை பின்தொடர்பவர்களும் அவருடைய கல்லறைக்குச் சென்றபோது, அங்கு அவரது உடல் வைக்கப்பட்ட இடம் காலியாக இருப்பதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அந்த நாளில் தான் கிறிஸ்து மரணத்தை வென்றார் என்று நம்பப்படுகிறது. இந்த காரணத்திற்காகவே பலர் அவரை ‘கடவுளின் மகன்’ என்று அழைக்கின்றனர். அதன்படி கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் என்று குறிப்பிடுகின்றனர். மக்கள் இந்த நாளை மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் கொண்டாடுகிறார்கள். ஈஸ்டர் கொண்டாட்டத்தின் மிக முக்கியமான பகுதி உணவு தான். அதன்படி இந்த பண்டிகளையில் என்ன மாதிரியான உணவுகள் மற்றும் இனிப்புகள் இடம்பெறும் என்று பார்க்கலாம்.

ஈஸ்டர் முட்டைகள் (Easter eggs): ஈஸ்டர் பண்டிகையில் மிக முக்கியமாக இடப்பெறும் ஒரு பொருள் என்றால் அது ஈஸ்டர் முட்டைதான். ஆரம்பத்தில் மக்கள் சாதாரண கோழி முட்டைகளில் வெவ்வேறு வண்ணங்களை பூசி பயன்படுத்தினர். ஆனால் இன்றைய காலத்தில், பெரும்பான்மையான மக்கள் சாக்லேட் முட்டைகளை தயாரித்து அதில் உண்ணக்கூடிய பல வண்ண திரவங்களை தடவி வைத்துக்கொள்கின்றனர். ஈஸ்டர் முட்டைகள் கல்லறையிலிருந்து இயேசுவின் தோற்றத்தையும் உயிர்த்தெழுதலையும் குறிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஹாட் கிராஸ் பன்ஸ் (Hot cross buns): இது ஒரு பழத்தால் செய்யப்படும் மசாலா இனிப்பு பன். இதன் மேலே ஒரு குறுக்குவெட்டு சிம்பல் போடப்பட்டிருக்கும். பன்னில் உள்ள சிலுவை கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட சிலுவையை குறிக்கிறது மற்றும் பன்களில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் அவரது மரணத்திற்குப் பிறகு உடலை பதப்படுத்தி அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டவை என்று நம்பப்படுகிறது.

ஈஸ்டர் பன்னி கரன்ட் பிஸ்கட் (Easter bunny currant biscuits): இந்த பிஸ்கட்டுகள் பொதுவாக வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, சர்க்கரை, மாவு மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. லேசான மசாலா சுவைகொண்ட திராட்சை(currant) ஜாம் அடைக்கப்பட்ட இந்த பிஸ்கட் ஈஸ்டர் அன்று சாப்பிடக்கூடிய ஒரு பாரம்பரிய உணவாகும். சிலுவையில் அறையப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட பதப்படுத்துதல் செயல்பாட்டில் கிறிஸ்துவின் உடலில் இந்த மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டது என்ற நம்பிக்கை இருந்ததால், விசுவாசிகள் இந்த பிஸ்கட்டில் மசாலா சுவை கொண்ட காசியா ஆயிலை சேர்த்தனர்.

ஈஸ்டர் பன்னி கப்கேக்குகள் (Easter bunny cupcakes): ஈஸ்டர் பன்னி என்பது ஒரு நாட்டுப்புற உருவம் மற்றும் ஈஸ்டரின் சின்னம். ஈஸ்டர் பன்னி ஈஸ்டர்டைடு பருவத்தில் குழந்தைகளின் நல்ல மற்றும் மோசமான நடத்தைக்கு ஒரு நீதிபதியாக இருப்பார் என்று நம்பப்பட்டது. இப்போதெல்லாம், மக்கள் ஈஸ்டர் பன்னியை சாக்லேட் மூலம் தயாரித்து கப்கேக்குகள் மேல் அலங்கரித்து ஈஸ்டர் கருப்பொருளைக் கொடுக்கிறார்கள்.

மேலும் படிக்க... Happy Easter 2021 | ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாட்டம்...

ஈஸ்டர் ரொட்டி (Easter bread): இது அடிப்படையில் பிங்கா எனப்படும் இனிப்பு ரொட்டி ஆகும். இந்த ரொட்டி வெண்ணெய் மற்றும் முட்டைகளால் செய்யப்படுகின்றன. மேலும் இவை மிகவும் மிருதுவான ஒரு உணவுப் பொருள் ஆகும். இந்த ரொட்டி வட்ட வடிவத்தில் செய்யப்படும் மற்றும் அதன் மேற்பரப்பு கிராஸ் சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிலர் ரொட்டியை ஒரு மாலை போல் தோற்றமளிக்கும் விதத்தில் பின்னல் வடிவத்தில் செய்வதுண்டு.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: