ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

துவாதசி பாரணை | பருப்பு போட்டு சுண்டைக்காய் கூட்டை இப்படி செய்து பாருங்க!

துவாதசி பாரணை | பருப்பு போட்டு சுண்டைக்காய் கூட்டை இப்படி செய்து பாருங்க!

துவாதசி பாரணை - சுண்டைக்காய் கூட்டு

துவாதசி பாரணை - சுண்டைக்காய் கூட்டு

மருத்துவ குணம் நிறைந்த துவாதசி ஸ்பெஷல் சுண்டைக்காய் கூட்டை முறையாக எப்படி எளிதாக செய்வது என்பதை பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் மறுநாளில் 21 வகை காய்கறிகளை சமைத்து சாப்பிட வேண்டும். அதில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என கூறுவர். இவை அடங்கிய உணவுகளை சாப்பிட்டுத் தான் விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு விரதத்தை நிறைவு செய்வதற்கு துவாதசி பாரணை என்று பெயர்.

சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது. சுண்டைக்காய்க்கு வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. அப்படிப்பட்ட மருத்துவ குணம் நிறைந்த துவாதசி ஸ்பெஷல் சுண்டைக்காய் கூட்டை முறையாக எப்படி எளிதாக செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சுண்டைக்காய் - 1 கப் ( முள்ளெடுத்து நடுவில் கீரிக் கொள்ளுங்கள் )

பாசிப்பருப்பு - 1 1/2 கப்

தேங்காய் - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 3

நெல்லிக்காய் - 1

தாளிக்க :

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்- சிறிதளவு

செய்முறை :

சுண்டைக்காய், பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து குழைவாக வேகவைத்து கொள்ளவும். பின்னர் தேங்காய், காய்ந்த மிளகாய், நெல்லிக்கயை கொட்டை எடுத்து விட்டு மிக்ஸியில் சிறிது உப்பு சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அரைத்த கலவையை வேகவைத்த சுண்டைக்காய் பாசிப்பருப்பில் சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக தாளித்துக் கொட்டினால் சுண்டைக்காய் கூட்டு தயார்.

குறிப்பு : துவாதசி அல்லாத மற்ற நாட்களில் இந்த கூட்டு செய்கையில் புளிப்பு சுவைக்காக நெல்லிக்காய்க்கு பதில் சிறிதளவு புளியை கூட சேர்க்கலாம்.

First published:

Tags: Food recipes, Healthy Food