ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

துவாதசி பாரணை | சுவையான நெல்லிக்காய் தயிர் பச்சடியை இப்படி செய்து பாருங்க!

துவாதசி பாரணை | சுவையான நெல்லிக்காய் தயிர் பச்சடியை இப்படி செய்து பாருங்க!

துவாதசி பாரணை - நெல்லிக்காய் தயிர் பச்சடி

துவாதசி பாரணை - நெல்லிக்காய் தயிர் பச்சடி

மருத்துவ குணம் நிறைந்த துவாதசி ஸ்பெஷல் நெல்லிக்காய் தயிர் பச்சடியை முறையாக எப்படி எளிதாக செய்வது என்பதை பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் மறுநாளில் 21 வகை காய்கறிகளை சமைத்து சாப்பிட வேண்டும். அதில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என கூறுவர். இவை அடங்கிய உணவுகளை சாப்பிட்டுத் தான் விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு விரதத்தை நிறைவு செய்வதற்கு துவாதசி பாரணை என்று பெயர்.

நெல்லிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது ஒரு சூப்பர்ஃபுட் என்று கூறப்படுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நோய் எதிர்ப்பு சக்தி, கால்சியம், பாஸ்பரஸ்,இரும்பு, கரோட்டின், தையாமின், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இதனால் நெல்லிக்காய் பல நோய்களை குணப்படுத்தும் ஒரு உன்னதமான மருந்தாக செயல்படுகிறது. மேலும் இதில் நோயெதிர்ப்பு சக்திகள் அதிகம் நிறைந்துள்ளதால், தொற்றுநோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது. அப்படிப்பட்ட மருத்துவ குணம் நிறைந்த துவாதசி ஸ்பெஷல் நெல்லிக்காய் தயிர் பச்சடியை முறையாக எப்படி எளிதாக செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் - 2 ( கொட்டை நீக்கியது )

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - 1 சிறிய துண்டு

கறிவேப்பிலை - 10 - 12

துருவிய தேங்காய் - 1 கையளவு

தயிர் - 1 கப்

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க :

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு

பெருங்காயப் பொடி

காய்ந்த மிளகாய்

கறிவேப்பிலை

Also Read : துவாதசி பாரணை | துவாதசிக்கு அகத்திக்கீரை பொரியலை இப்படி செய்து பாருங்க!

செய்முறை :

பெரிய நெல்லிக்காய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, துருவைய தேங்காய், உப்பு, பாதி கப் தயிரை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் போட்டு மீது உள்ள தயிரை ஊற்றி நன்கு கிளறவும். இறுதியாக தாளித்து கொட்டினால் துவாதசி ஸ்பெஷல் நெல்லிக்காய் தயிர் பச்சடி தயார்!

First published:

Tags: Amla, Food recipes, Gooseberry