ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

துவாதசி பாரணை | துவாதசிக்கு அகத்திக்கீரை பொரியலை இப்படி செய்து பாருங்க!

துவாதசி பாரணை | துவாதசிக்கு அகத்திக்கீரை பொரியலை இப்படி செய்து பாருங்க!

துவாதசி பாரணை - அகத்திக்கீரை பொரியல்

துவாதசி பாரணை - அகத்திக்கீரை பொரியல்

மருத்துவ குணம் நிறைந்த துவாதசி ஸ்பெஷல் அகத்திக் கீரை பொறியலை முறையாக எப்படி எளிதாக செய்வது என்பதை பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் மறுநாளில் 21 வகை காய்கறிகளை சமைத்து சாப்பிட வேண்டும். அதில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என கூறுவர். இவை அடங்கிய உணவுகளை சாப்பிட்டுத் தான் விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு விரதத்தை நிறைவு செய்வதற்கு துவாதசி பாரணை என்று பெயர்.

அகத்திக்கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. அகத்திக்கீரையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இவற்றின் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. அப்படிப்பட்ட மருத்துவ குணம் நிறைந்த துவாதசி ஸ்பெஷல் அகத்திக் கீரை பொறியலை முறையாக எப்படி எளிதாக செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அகத்திக்கீரை - 1 கட்டு (ஆய்ந்து கிள்ளியது)

பாசிப் பருப்பு - 1/2 கப் ( ஊற வைத்தது )

தேங்காய் துருவல் - 1 கப்

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கடுகு உளுத்தம் பருப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் போட்டு பொறிந்ததும் கிள்ளி வைத்திருந்த அகத்திக்கீரையும் ஊற வைத்த பாசி பருப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்குங்கள். பின்னர் சிறிது உப்பு சேர்த்து கிளறிய பின்னர் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி வதக்கியதும் இறக்கினால் அகத்திக்கீரை பொரியல் தயார்!

Also Read : நாளை துவாதசி... கண்டிப்பாக இதை சாப்பிடுங்கள்...!

குறிப்பு : அகத்திக்கீரையில் சிறிது கசப்பு தன்மை இருப்பதனால் அதிகமான தேங்காய் துருவலை சேர்க்கிறோம். கசப்பு தன்மையை விரும்புவோர் தேங்காய் துருவலின் அளவைக் குறைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

First published:

Tags: Healthy Food, Spinach, Vegetable