மொறு மொறு சுவையில் டீ- க்கு பொருத்தமாக இருக்கும் ’முருங்கைக்காய் வடை ‘ : ரெசிபி இதோ...

மொறு மொறு சுவையில் டீ- க்கு பொருத்தமாக இருக்கும் ’முருங்கைக்காய் வடை ‘ : ரெசிபி இதோ...
முருங்கைக்காய் வடை
  • Share this:
மாலையில் டீ - க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி வாழைப்பூ வடை, பருப்பு வடை என சாப்பிட்ட நீங்கள் முருங்கைக்காயில் வடை சாப்பிட்டிருக்கீங்களா..? டிரை பன்னி பாருங்க..!

தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் - 2


வெங்காயம் - 2
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - 1 ஸ்பிரிங்பொட்டுக் கடலை - 1/2 கப்
உப்பு - தே.அசெய்முறை :

முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வேக வையுங்கள். முடிந்தால் குக்கரில் போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி விடலாம்.

பின் அதில் உள்ள சதையை மட்டும் எடுத்து தோலை கழித்துவிடுங்கள்.

பின் பொட்டுக் கடலையை மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் முருங்கைக்காய் சதையுடன் பொட்டுக் கடலை பொடியுடன் கலந்துகொள்ளுங்கள். பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை , உப்பு, இஞ்சி என அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளுங்கள்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடை போல் தட்டி எண்ணெய் போட்டு பொறித்து எடுங்கள். அவ்வளவுதான் மொறு மொறு வடை தயார்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading