Home /News /lifestyle /

வெறும் முருங்கைக்காயை வைத்து இப்படியொரு குழம்பு வைக்கலாமா..? உடனே செஞ்சு பாருங்க...

வெறும் முருங்கைக்காயை வைத்து இப்படியொரு குழம்பு வைக்கலாமா..? உடனே செஞ்சு பாருங்க...

முருங்கைக்காய் குழம்பு

முருங்கைக்காய் குழம்பு

வெறும் முருங்கைக்காயை புளி ஊற்றாமல் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சாம்பார் அல்லது காரக்குழம்பு... ஏன்... கறிக்குழம்பாகவே இருந்தாலும் அதில் 2 துண்டு முருங்கைக்காயை சேர்த்தால் அந்த குழம்பின் சுவையே தனிதான். அதிலும் அதை சமைத்த பின் சாப்பிடும் சுவைக்கு ஈடு இணையே இருக்காது. அந்த வகையில் வெறும் முருங்கைக்காயை புளி ஊற்றாமல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் - 1
தக்காளி - 2
வெங்காயம் - 1
பூண்டு - 7 பற்கள்
கடுகு - 1 tsp
சீரகம் - 1 tsp
வெந்தயம் - 1/2 tsp
உப்பு - தே.அ
மஞ்சள் தூள் - 1 tsp
குழம்பு மிளகாய் தூள் - 2 tbsp
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

கடாயில் 1 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் கொஞ்சம் சேர்த்து முருங்கைக்காயை வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

தண்ணீரை ஊற்ற வேண்டாம் அப்படியே வையுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து கண்ணாடி போல் வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்குங்கள்.

நீங்கள் எந்த குழம்பு செய்தாலும் அதன் சுவையையும் மணத்தையும் கூட்ட வெங்காய வடகம் : ரெசிபி இதோ..

பின் முருங்கைக்காயை வேக வைத்த தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். கொதிக்க துவங்கும்போது கறிவேப்பிலை சேருங்கள்.

பச்சை வாசனை போனதும் வேக வைத்த முருங்கைக்காயை சேர்க்கவும். உங்களுக்கு குழம்பு தேவையான பதம் வரும் வரை கொதிக்க வையுங்கள்.

தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் முருங்கைக்காய் குழம்பு தயார்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Drumstick Recipes

அடுத்த செய்தி