இந்தியர்களுக்கு தினசரி 2 - 3 கப் டீ குடிப்பது பழக்கம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு டீ -யும் , நம்மையும் பிரிக்க முடியாது. எந்த ஒரு டென்ஷன், தலைவலி என்றாலும் ஒரு டீ குடித்தால் போதும் எல்லாம் பறந்துபோகும். இதையெல்லாம் விட நீங்கள் டீ குடிப்பதால் ஆயுள் கூடும் என்று ஒரு ஆய்வு சொன்னால் எப்படி இருக்கும்..?
ஆம்.... European Journal of Preventive Cardiology நடத்திய ஆய்வு ஒன்று, டீ குடிப்பதால் உடலானது ஆரோக்கியம் பெறுகிறது. இதனால் நீங்கள் நீண்ட நாள் வாழ்வீர்கள் என்று கூறியுள்ளது.
சீனாவில் ஒரு லட்சம் பேருடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் யாருக்குமே மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் என எந்த அறிகுறியும் இல்லை. ஆய்வின் பங்கேற்பாளர்களை ஒரு நாளைக்கு மூன்று முறை அல்லது வாரத்திற்கு அதிகமாக டீ குடிக்கும் பழக்கம் கொண்டோர், குறைவாகக் குடிக்கும் பழக்கம் கொண்டோர் என இரண்டு வகையாக பிரித்துள்ளனர்.
அதில் அதிகம் பால் அல்லாத டீ குடிக்கும் பழக்கம் கொண்ட 50 வயது கொண்ட முதியவருக்கு பாதிப்பு இல்லாத இதய நோயும், பக்கவாதமும் வந்துள்ளது. ஆனால், அதிகமாக டீ பழக்கம் இல்லாதவருக்கு 1.41 ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கண்ட வியாதிகள் வந்துள்ளன.
மேலும், ஆராய்ச்சி கூறுகையில் அதிக டீ பழக்கம் உள்ளவர்களுக்கு நோய் தாக்குதல் என்பது 20 சதவீதம் குறைவாகவே உள்ளது. 15 சதவீதம் இறக்கும் ஆபத்தும் குறைவாக உள்ளது.
எனவே பால் கலப்படமில்லாத டீயை அதிகம் குடிக்கும் பழக்கம் இருப்போருக்கு நோய் தாக்குதல் என்பது குறைவு என்பதே இந்த ஆய்வின் முடிவாக உள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.