தெருவுக்கு 4 ஃபாஸ்ட்புட் கடைகள், திரும்பிய பக்கம் எல்லாம் பானிபூரி, மசாலா பூரி என சாட் ஸ்டால்கள், மெக்டோனால்ட்ஸ், கேஎஃப்சி என கவர்ச்சிகரமான ஃபுட் ஜெயின்கள் ஆகியன் எங்கு பார்த்தாலும் உள்ளன. தற்போது இவை அனைத்தும் மெட்ரோ நகரங்களையும் கடந்து, இரண்டாம் கட்ட நகரங்களையும், சிறு நகரங்களையும் கூட ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. இப்படி திரும்பிய திசை எல்லாம் எண்ணெய்யில் பொறித்த, வறுத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள் குவிந்து கிடப்பதால், ஆரோக்கியமான உணவு முறை என்பது மிகவும் குறைந்துவிட்டது.
போதாக்குறைக்கு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் வேறு ஆஃபர் மேல் ஆஃபர் கொடுத்து ஜங்க்ஃபுட் வகைகள் மீது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் ஆர்வத்தை தூண்டுகின்றன. அதேபோல் இன்றைய இளம் தலைமுறையினர் இடையே ஒரு கையில் பீட்சா, பர்கர், பாஸ்தா, நூடுல்ஸ், சிக்கன் போன்ற உணவையும், மற்றொரு கையில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை கொண்ட சோடா வகை பானங்களையும் வைத்துக்கொண்டு சாப்பிடுவது தான் நாகரீகம் என்ற தோற்றமும் உருவாக்கப்பட்டு வருகிறது.
அதிக அளவிலான சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு அடங்கிய பதப்பட்ட, வறுக்கப்பட்ட, பொரித்தெடுக்கப்பட்ட உணவுகளுக்கு மாற்றாக சம்பந்த நிறுவனங்கள் தயாரிக்கும் டயட் வகை உணவுகள் மீதும் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது வழக்கமான குளிர்பானங்களுக்குப் பதிலாக டயட் சோடா, எண்ணெயில் பொறிக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக ஏர் பிரையரில் தயாரிக்கப்படும் உணவுகள், பேக் செய்யப்பட்ட சிப்ஸ் வகைகள் உடலுக்கு ஆரோக்கியமானது என நம்பப்படுகிறது.
Also Read : Fast Food உணவுகள் உங்கள் உடலை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா?
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான உரையாடலில் அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணரான மருத்துவர் பிரியங்கா ரோஹத்கி, "உடலால் சில விஷயங்களை குறிப்பிட்ட வயது வரை கையாள முடியும், ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் தவறான உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்காக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.
டீப் பிரை உணவுகளை தவிர்த்துவிட்டு, ஏர் பிரையர்களில் வறுத்த உணவுகளை எடுத்துக்கொள்வதால், அக்ரிலாமைடு மற்றும் AGEs போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உற்பத்தியாவது குறைக்கப்படுமோ தவிர, முற்றிலும் இல்லாமல் போகாது என்றும், அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் ரசாயனங்களின் அளவும் அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.