Home /News /lifestyle /

நீரழிவு நோயாளிகள் கவனத்திற்கு... தினமும் 4 கப் டீ குடிச்சா சுகர் கண்ட்ரோல் ஆகுமா..?

நீரழிவு நோயாளிகள் கவனத்திற்கு... தினமும் 4 கப் டீ குடிச்சா சுகர் கண்ட்ரோல் ஆகுமா..?

டீ

டீ

டீ குடிப்பவர்கள் மற்றும் டீ குடிக்காதவர்களுக்கு இடையிலான, டைப் 2 நீரழிவு நோய்க்கான சாத்தியக்கூறுகளை பொறுத்தவரை வயது, பாலினம், உடலியல் செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆபத்தின் அளவை கணக்கிடலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தினமும் 4 கோப்பை தேநீர் பருகுவது டைப் 2 டயாபெட்டீஸ் வரும் அபாயத்தை குறைக்க உதவும் என புதிய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் நீரிழிவு நோய்க்கான ஐரோப்பிய சங்கத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. அதில் ஏற்கனவே நடத்தப்பட்ட 19 முந்தைய ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி தினசரி 4 கப் தேநீர் குடிப்பது டைப் 2 நீரழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை 17 சதவீதம் குறைக்க வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.

பிளாக் டீ, கிரீன் டீ, ஊலாங் டீ ஆகியவற்றின் சராசரி பயன்பாட்டிற்கு டைப் 2 நீரழிவு நோய்க்கும் இடையே தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 8 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பங்கேற்றுள்ளனர்.

சீனாவில் உள்ள வுஹான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சியாயிங் லி கூறுகையில், "எங்கள் முடிவுகள் புதிரானவை. ஏனென்றால் மக்கள் தினமும் 4 கப் தேநீர் அருந்துவது, டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் வாய்ப்புள்ளது என்பதை கண்டறிந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.



தினமும் ஒன்று முதல் மூன்று கப் தேநீர் அருந்துபவர்களுக்கு டைப் 2 நீரழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை 4 சதவீதம் வரை குறைப்பதாகவும், அதே தினமும் 4 கப் தேநீர் குடிப்பவர்களுக்கு நோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து 17 சதவீதம் வரை குறைவாக இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மஞ்சள் அதிகம் சாப்பிட்டால் என்ன நேரிடும்.? இவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது - எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்.!

டீ குடிப்பவர்கள் மற்றும் டீ குடிக்காதவர்களுக்கு இடையிலான, டைப் 2 நீரழிவு நோய்க்கான சாத்தியக்கூறுகளை பொறுத்தவரை வயது, பாலினம், உடலியல் செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆபத்தின் அளவை கணக்கிடலாம் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் பங்கேற்பாளர்கள் பருகும் தேநீர், பாலினம், அவர்கள் வசிக்கும் பகுதி என பல தொடர்புகளும் தேநீர் குடிக்கும் அளவை மாற்றக்கூடும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது அதிக அளவில் தேநீர் பருந்துவது மட்டுமே நீரழிவு நோய்க்கான அபாயத்தை குறைக்க உதவும், குறிப்பாக ஒருநாளைக்கு 4 கப் தேநீரையாவது குறைந்தபட்சம் பருக வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தேநீரில் உள்ள பாலிஃபீனால்கள் போன்ற குறிப்பிட்ட மூலக்கூறுகள் இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கலாம் என்றாலும், அதிலுள்ள உயிரியக்கக் கலவைகள் போதுமான அளவு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தேநீர் பருகுவது நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்றாலும், அதனை நிரூபிக்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



சீனாவின் கிளாசிக் தேநீரான ஊலாங், கிரீன் மற்றும் பிளாக் தேநீருக்கான தேயிலை தயாரிக்கப் பயன்படும் அதே தாவரத்தில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. ஆனால் ஊலாங் தேயிலை ஓரளவுக்கும், பிளாக் தேயிலை முற்றிலுமாகவும் ஆக்ஸினேற்றம் செய்யப்பட்டு தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீயைப் பொறுத்தவரை குறைந்த அளவிலான ஆக்ஸினேற்றம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Diabetes, Green tea, Tea

அடுத்த செய்தி