Home /News /lifestyle /

வீட்டில் தோசை மாவு இல்லையா? 10 நிமிடத்தில் உடனடி தோசை மாவு ரெடி பண்ணலாம்!

வீட்டில் தோசை மாவு இல்லையா? 10 நிமிடத்தில் உடனடி தோசை மாவு ரெடி பண்ணலாம்!

தோசை மாவு

தோசை மாவு

10 நிமிடத்தில் தோசை மாவு தயார் செய்து விடலாம். எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

    இல்லத்தரசிகள் பெரும்பாலும் சந்திக்கும் பிரச்சனையில் இதுவும் ஒன்று. அதாவது தோசை, இட்லி மாவு வீட்டில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் திடீரென்று ஃபிரிட்ஜை திறந்து பார்த்தால் தான் தெரியும் மாவு காலி என்று. அல்லது ஒரு தோசை வரும் அளவுக்கு தான் மாவு இருக்கும். அதன் பின்பு தான் பரபரப்பாக என்ன டிபன் செய்வது என்று யோசிக்க தொடங்கி, அவசரத்தில் ஏதோ ஒன்றை செய்து முடித்து விடும். ஒருவேளை இனிவரும் நாட்களில் நீங்களும் இதே போன்ற பிரச்சனையை சந்திக்க நேரிடால் பதற்றமே வேண்டாம். 10 நிமிடத்தில் தோசை மாவு தயார் செய்து விடலாம். எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

    இந்த  உடனடி தோசை மாவு கலவையை வைத்து க்ரிஸ்பியாக தோசை சுட்டு சாப்பிடலம். இந்த ரெசிபி, க்ரிஸ் குக்கரி சேனலில் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளது. இப்போது இதற்கு தேவையான பொருட்கள், ரவை, கோதுமை மாவு, தக்காளி, காய்ந்த மிளகாய், அரிசி மாவு, உப்பு, எண்ணெய், சீரகம், வெங்காயம், மிளகு தூள்.

    பருப்பே இல்லாத இட்லி சாம்பார்.. தெரிஞ்சு வச்சிக்கோங்க அவசரத்திற்கு யூஸ் ஆகும்!

    செய்முறை:

    1. முதலில் தக்காளி, காய்ந்த மிளகாய் 1 கப் ரவை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    2. பின்பு அந்த கலவையை பாத்திரல் மாற்றி அதில், 1/2 கப் கோதுமை மாவு, 1/2 கப் அரிசி மாவு, தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    வெங்காயம், தக்காளி இல்லாமல் உளுத்தம் பருப்பை மட்டும் அரைத்து சட்னி செய்ய தெரியுமா..? இதோ ரெசிபி…

    4. இப்போது நறுக்கிய வெங்காயம், சீரகம், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கலவையை தோசைமாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்



    4. கடைசியாக இந்த மாவை பக்குவமாய் தோசை போல் சுட்டு எடுத்து சட்னியுடன் பரிமாறினால் சூப்பரான தோசை தயார். இதை ரவா தோசை, தக்காளி தோசை அரிசி தோசை என விருப்பத்திற்கு ஏற்றார் போல் அழைக்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Breakfast, Food recipes, Idli dosa batter

    அடுத்த செய்தி