Home /News /lifestyle /

தண்ணீர் காலாவதியாகுமா..? நீங்கள் குடிக்கும் தண்ணீர் பாதுகாப்பானதா..? கேள்விகளுக்கான விடை...

தண்ணீர் காலாவதியாகுமா..? நீங்கள் குடிக்கும் தண்ணீர் பாதுகாப்பானதா..? கேள்விகளுக்கான விடை...

தண்ணீர் காலாவதியாகுமா..?

தண்ணீர் காலாவதியாகுமா..?

ஒரு பாட்டில் தண்ணீர் காலாவதியாகும் முன் எவ்வளவு காலம் நன்றாக இருக்கும் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு இல்லை. பயன்படுத்தப்படும் பொருளைப் பொறுத்து, மேலும் பேக்கேஜ்டு பாட்டில் தண்ணீர் பொதுவாக 2 ஆண்டுகள் வரை நன்றாக இருக்கும்.

நீங்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதற்காக வாங்கும் போது, அந்த பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் அச்சிடப்பட்ட காலாவதி தேதியை கவனித்திருக்கலாம். தண்ணீர் ஒரு எளிய பொருளாயிற்றே அதற்கு கூடவா காலாவதி தேதி இருக்கிறது, தண்ணீர் கெட்டு போகுமா என்ன என்பது பலரது மனதில் கேள்வியாக தோன்றியிருக்கிறது.

இந்த செய்தியில் தண்ணீர் காலாவதியாக கூடியதா என்பதை பற்றியும், இது குறித்த நிபுணர்களின் கருத்தையும் பார்க்கலாம். தண்ணீர் அவ்வளவு சீக்கிரம் கெடாது என்றாலும் அதை சரியான முறையில் சேமிக்கவில்லை என்றால் அது மோசமாகிவிடும். காலப்போக்கில் தண்ணீரில் அதிக எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் வளரும். இது தண்ணீரை குடிப்பதற்கு பாதுகாப்பற்றதாக மாற்றுகிறது. எனவே தண்ணீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் பாதுகாப்பாக இருக்கும் என்று கூற முடியாது.

தண்ணீர் கெடாது என்று சொன்னாலும் கூட மேலே குறிப்பிட்டபடி அது எதில் மற்றும் எவ்வாறு சேமித்து வைக்கப்படுகிறது என்பது ஒரு முக்கிய அம்சமாகும். இந்த நேரத்தில் தண்ணீர் நமது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி பல கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கான பதிலை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சப்னா ஜெய்சிங் படேல் கூறி இருக்கிறார்.



ஒரு பாட்டிலில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீர் எவ்வளவு நாளில் காலாவதியாகும்.?

ஒரு பாட்டில் தண்ணீர் காலாவதியாகும் முன் எவ்வளவு காலம் நன்றாக இருக்கும் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு இல்லை. பயன்படுத்தப்படும் பொருளைப் பொறுத்து, மேலும் பேக்கேஜ்டு பாட்டில் தண்ணீர் பொதுவாக 2 ஆண்டுகள் வரை நன்றாக இருக்கும். இருப்பினும் தண்ணீர் பேக் செய்யப்பட்டுள்ள பாட்டிலை சரியான இடத்தில வைத்து ஸ்டோர் செய்யவில்லை என்றால், அது விரைவில் கெட்டுவிடும். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் காலப்போக்கில் ரசாயனங்கள் தண்ணீரில் கலக்க ஆரம்பிக்கும். எனவே பாட்டில் தண்ணீரை குடிக்கும் முன் எப்போதும் காலாவதி தேதியை சரி பார்க்கவும்.

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை டூத் பிரெஷ்ஷை மாற்ற வேண்டும்..? இல்லையெனில் என்ன ஆகும்..?

பழைய தண்ணீரை குடிப்பதால் நோய் ஏற்படுமா?

பழைய தண்ணீரை குடிப்பதால் நோய் வர வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் தண்ணீர் சரியாக சேமிக்கப்படாவிட்டால், பாக்டீரியாக்கள் வளர்ந்து நம்மை நோய்வாய்ப்படுத்த கூடும். எனவே ஃபிரெஷ்ஷான மற்றும் சுத்தமான தண்ணீரை மட்டுமே குடிப்பது அவசியம்.



காலாவதியான தண்ணீரை குடிப்பது பாதுகாப்பானதா?

திறந்த கண்ணாடி அல்லது கன்டெய்னரில் இரவு முழுவதும் அல்லது நீண்ட காலம் இருக்கும் தண்ணீர் ஏராளமான பாக்டீரியாக்களின் இருப்பிடமாக உள்ளது மற்றும் குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல. அந்த கிளாஸ் தண்ணீருக்குள் நிறைய தூசி, குப்பைகள் மற்றும் பிற சிறிய நுண்ணிய துகள்கள் சென்று குடிப்பதற்கு பாதுகாப்பற்றதாக அந்த தண்ணீரை மாற்றிவிடுகின்றன.

பூசணி விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் 4 முக்கியமான நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

தண்ணீரை அதிக நேரம் ஃபிரெஷ்ஷாக வைத்திருப்பது எப்படி?

நீங்கள் தண்ணீரை நீண்ட நேரம் ஃபிரெஷ்ஷாக வைத்திருக்க விரும்பினால், அதை கூலான மற்றும் இருண்ட இடத்தில் ஒரு கிளாஸ் கன்டெய்னர் / பாட்டிலில் சேமிக்க வேண்டும். மேலும் அதன் மூடியை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். இதனால் காற்று உள்ளே நுழைந்து தண்ணீரை மாசுபடுத்தாது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Drinking water

அடுத்த செய்தி