• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • காரசார சுவையில் முட்டை போட்டி ஃபிரை..! செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி?

காரசார சுவையில் முட்டை போட்டி ஃபிரை..! செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி?

முட்டை போட்டி ஃபிரை

முட்டை போட்டி ஃபிரை

முட்டை பொடிமாஸ் போல் உதிரியானதும் ஒதுக்கிவைத்துள்ள போட்டிகளை இணைத்து முற்றிலும் கிளறவும். மீண்டும் 5 நிமிடங்கள் சிறு தீயில் வேகவிடுங்கள்.

  • Share this:
    ஆட்டின் உறுப்புகள் அனைத்துமே உடலுக்கு வலுசேர்க்கக் கூடிய உணவுகளாகும். அந்த வகையில் போட்டியில் முட்டை உடைத்து ஊற்றி காரசாரமான சுவையில் எப்படி ஒரு சைட் டிஷ் செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    போட்டி - 1 கப்
    முட்டை - 2
    வெங்காயம் - 3
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - 3 tsp
    மஞ்சள் பொடி - 1 tsp
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tsp
    கரம் மசாலா - 1 tsp
    கடுகு - 1 tsp
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 4 tsp



    செய்முறை :

    போட்டியை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அடுத்ததாக குக்கரில் 1 tsp மஞ்சள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். 10 நிமிடங்கள் வேக வேண்டும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும்.

    நன்கு சுருங்க வதங்கியதும் மஞ்சள், மிளகாய் தூள் , கரம் மசாலா சேர்த்து வதக்கவும். அடுத்ததாக வேன வைத்துள்ள போட்டிகளை போடவும் 10 - 15 நிமிடங்களுக்கு மசாலா ஊற கொதிக்கவிடுங்கள். உப்பு சேர்க்க மறக்காதீர்கள்.

    தண்ணீர் வற்றி டிரை ஆகும் வரை வதக்குங்கள். நீர் வற்றியதும் அவற்றை கடாயிலேயே ஒரு புறம் ஒதுக்கிவிட்டு முட்டைகளை உடைத்து ஊற்றவும். முட்டை பொடிமாஸ் போல் உதிரியானதும் ஒதுக்கிவைத்துள்ள போட்டிகளை இணைத்து முற்றிலும் கிளறவும். மீண்டும் 5 நிமிடங்கள் சிறு தீயில் வேகவிடுங்கள்.

    இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான முட்டை போட்டி தயார். சண்டே ஸ்பெஷலில் இதையும் சைட் டிஷாக செய்தால் அருமையாக இருக்கும்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: