கேழ்வரகு மாவில் புட்டு செஞ்சா எப்படி இருக்கும் தெரியுமா..? டிரை பண்ணி பாருங்க..!

டீ குடிக்கும் மாலை வேளையில் வீட்டில் இருப்போருக்கு கேழ்வரகு மாவில் புட்டு செஞ்சு கொடுங்கள். மிச்சமில்லாமல் சுவைப்பார்கள். இதில் நார்ச்சத்து, இரும்புச் சத்து இருப்பதால் ஆரோக்கியமும் உள்ளது. 

கேழ்வரகு மாவில் புட்டு செஞ்சா எப்படி இருக்கும் தெரியுமா..? டிரை பண்ணி பாருங்க..!
கேழ்வரகு புட்டு
  • Share this:
தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு - அரை கிலோ
உப்பு - கால் ஸ்பூன்


தேங்காய் - அரை மூடி
நாட்டு சர்க்கரை - 5 ஸ்பூன்சர்க்கரை - 2 ஸ்பூன் ( தேவைப்பட்டால்)
நெய் - ஒரு ஸ்பூன்தண்ணீர் - ஒரு கப்
ஏலக்காய் - 4செய்முறை :

கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி உப்பு சேர்த்து கலக்கவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசையவும். மாவு கெட்டியாக இல்லாமல் உதிரி உதிரியாக கட்டிகள் இல்லாமல் பிசையவும்.

பின் இட்லி குண்டான் தட்டில் பருத்தித் துணி விரித்து அதன்மேல் இந்த மாவைக் கொட்டி பரப்பவும்.

இட்லி சுடுவதற்கு ஊற்றும் தண்ணீரின் அளவையே இதற்கும் ஊற்றவும். தண்ணீர் கொதித்தபிறகு மாவு தட்டை வைக்கவும்.

மற்ற இட்லி தட்டுகளைக் காலியாக வைத்து மாவு உள்ள தட்டை மூன்று அல்லது நான்காம் அடுக்கில் வைக்கவும்.

மீந்துபோன இட்லியை வைத்து இத்தனை உணவுகளை சமைக்கலாமா..?

20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். மாவு வெந்துவிட்டதா என்பதை அறிய கையில் எடுத்து உதிரியாக வருகிறதா என தேய்த்து பார்க்கவும். கையில் ஒட்டாமல் உதிரியாக வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.

தற்போது வேக வைத்த மாவை பாத்திரத்தில் கொட்டி துருவிய தேங்காய், நாட்டு சர்க்கரை , உடைத்த ஏலக்காய், சர்க்கரை, நெய் சேர்த்து நன்குக் கிளறவும்.

அவ்வளவுதான் சுவையான கேழ்வரகு புட்டு தயார்..! இதை மாலை வேலையில் சாப்பிட்டால் நல்ல உணவாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கிய உணவு.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 
First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading