• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? இது தெரிந்தால் அரிசி உணவுகளை தவிர்க்க மாட்டீர்கள்..

அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? இது தெரிந்தால் அரிசி உணவுகளை தவிர்க்க மாட்டீர்கள்..

காட்சி படம்

காட்சி படம்

அரிசி நாம் பயன்படுத்தும் அடிப்படை தானியங்களில் ஒன்று.

  • Share this:
உடல் எடையை குறைக்க வேண்டுமா? அரிசி உணவை சாப்பிடுவதை குறையுங்கள் அல்லது அரிசி உணவுகளை முற்றிலுமாக தவிருங்கள் என்பது மிகவும் பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரிசியை முற்றிலுமாக தவிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல என்று சமீபத்தில் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பேஜில் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக அரிசி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். அரிசியில் அதிக மாவுச்சத்து உள்ளது. இதனால் உங்கள் உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிப்பு, கலோரிகளையும் அதிகரிக்கும். இதுவும் எடை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கும். எனவே, அரிசி உணவுகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு விதமாக கூறப்பட்டு வருகின்றது. ஆனால் அரிசி நாம் பயன்படுத்தும் அடிப்படை தானியங்களில் ஒன்று. எவ்வளவு விதவிதமாக வேற்று நாட்டு உணவுகளை சாப்பிட்டாலும், கைப்பிடியளவாவது சோறு சாப்பிட்டால் மட்டும் தான் திருப்தியாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

சுவையான உணவு மற்றும் நமக்கு மிகவும் பழக்கமான உணவு என்பதை கடந்து அரிசியில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. பல விதமான நம்முடைய உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு அரிசியில் உள்ள பல குணங்கள் உதவுகின்றன என்று பிரபலங்களுக்கு ஊட்டச்சத்து நிபுணராக மற்றும் ஆலோசகராக செயல்பட்டுவரும் ருஜுதா திவேகர் தெரிவித்துள்ளார்.

உங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க கூடாது மற்றும் அரிசி உணவால் நம்முடைய உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.,

* நம்முடைய உணவு பழக்கங்கள் எல்லாமே நம்முடைய சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு தான் அமைந்துள்ளது. எந்த வகையான பயிர்களை நாம் சாகுபடி செய்கிறோமோ அந்த பயிர்களோடு தான் நம்முடைய பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் நெல் அறுவடை செய்யப்படும் நெல் அறுவடையை முடித்து தான் நாம் பொங்கல் திருவிழாவை கொண்டாடுகிறோம்.

* ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆடி மாதத்தில் நெல் சாகுபடிக்கு விதைக்கத் தொடங்குவார்கள். நாட்டில் என்ன உணவுகள் விளைகிறதோ அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ப நாம் உண்ணும் போது நம்முடைய ஆரோக்கியம் கெடாமல் இருக்கும்.

* அரிசி ஒரு ப்ரீபயாட்டிக் தானியம். அரிசி உணவுகள் என்பது நமக்கான உணவாக மட்டுமன்றி, உடலிலுள்ள நல்ல நுண்ணுயிரிகளுக்கும் உணவாக அமைகிறது.

also read : மழைக்காலத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது : ஏன் தெரியுமா..?

* அரிசியை எல்லா விதமான காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் இறைச்சிகளுடன் சேர்த்து சுவையாக சமைக்கலாம். காய்கறியுடன் சேர்த்து சமைத்து உண்ணும் போது உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.

* அரிசி உணவு சாப்பிடும் போது நமக்கு வயிறு நிறைய உணவு உண்ட தான ஒரு உணர்வை ஏற்படுத்தும். அடிக்கடி பசிக்கும் உணவு தோன்றாது. எனவே நாம் கூடுதலாக நொறுக்குத்தீனிகள் அல்லது தின்பண்டங்கள் உண்ணுவதை தவிர்க்க வாய்ப்புள்ளது.

* அரிசியை நாம் பலவகையில் சமைக்கலாம். அரிசி சோறு என்பதைத் தவிர்த்து பாலீஷ் செய்யப்படாத அரிசியில் பி வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லா வயதினருக்கும் அரிசி சாதம் மிகவும் எளிதாக செரிமானமாகும். குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் எந்தவித தீங்கையும் அரிசி உணவு ஏற்படுத்தாது

* உடலுக்கு மட்டுமன்றி நம்முடைய சமூகத்துக்கும் நெல் சாகுபடி பலவிதங்களில் உதவியாக இருக்கிறது. நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று கூறப்படுகிறது. அதற்கு உறுதுணையாக இருப்பது நெல் சாகுபடி செய்யும் சமூகங்கள் தான். மற்ற துறைகளில் வேலை செய்யும் சமூகங்களை விட, விவசாயத்தில் குறிப்பாக நெல் சாகுபடி செய்பவர்கள் இடையே பால் வேற்றுமை இல்லை மற்றும் சமத்துவமாக ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

also read : வீட்டிலேயே வெண்ணிலா கப் கேக் செய்ய ரெசிபி!

* அரிசி இயற்கையான ஒரு ப்ரோபயாடிக் உணவு. யானையைக் கூட உடனே தயாரித்து விடலாம் ஆனால் ஐஸ் பிரியாணி செய்வதற்கு குறைந்தபட்சம் இருபத்தி நான்கு மணி நேரம் தேவை என்பது அரிசி சாதத்தின் மகத்துவத்தை தெரிவிக்கின்றது. எனப்படும் மீந்த அரிசி சோற்றில் தண்ணீர் ஊற்றி அடுத்த நாள் காலையில் ஒன்பது மிகவும் சத்து நிறைந்தது சமீபத்தில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இந்த பழைய சோற்றில் கிடைக்கிறது.

* அரிசி களைந்த நீரை தலைக்கு இயற்கையான வைட்டமின் பி நிறைந்த கண்டிஷனராக பயன்படுத்தலாம்.

நமக்கு மட்டுமல்லாமல், நெல் விதைப்பது முதல், அரிசியாக சந்தைப்படுத்துவது வரையில், கிடைக்கும் தவிடு, வைக்கோல், என ஒவ்வொரு பொருளும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. நெல் சாகுபடி செய்யும் போது, நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சாமல் தேவையான அளவு ஈரப்பதத்தையும், ஒத்த பருவ காலங்களில் விதைக்கப்படும் தானியங்கள் அல்லது காய்கறிகளுக்கு தேவையான இயற்கையான நைட்ரஜன் உள்ளிட்ட சத்துக்களையும் விட்டுச்செல்லும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: