Home /News /lifestyle /

மீந்துபோன இட்லியை வைத்து இத்தனை உணவுகளை சமைக்கலாமா..?

மீந்துபோன இட்லியை வைத்து இத்தனை உணவுகளை சமைக்கலாமா..?

இட்லி

இட்லி

வீட்டில் இட்லி சமைத்து மீந்துபோனால் அதை எப்படியெல்லாம் ருசிகரமாக சுவைக்கலாம் என்று பார்க்கலாம்.

    இட்லி ஸ்னாக்ஸ் : எண்ணெய் ஊற்றி கடுகு, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வெங்காயம், தக்காளியை வதக்கி இட்லி போட்டு பிரட்டி எடுத்தால் சுவையான இட்லி ஸ்னாக்ஸ் தயார்.

    இட்லி பர்கர் : இட்லியை துண்டுகளாக வெட்டி எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கலாம். க்ரிஸ்பியாக மாலையில் சுவைக்கலாம்.

    இட்லி உப்புமா : இது அனைவருக்கும் தெரிந்த ரெசிபிதான். எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் வதக்கி இட்லியை உதிர்த்து போட்டு கிளறினால் இட்லி உப்புமா தயார்.



    இட்லி பாஸ்தா : பாஸ்தா செய்வது போல் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, தக்காளி சாஸ், சோயா சாஸ் ஊற்றி இட்லியை போட்டு பிறட்டி எடுத்தால் இட்லி பாஸ்தா தயார்.

    இட்லி மஞ்சூரியன் : சிக்கன் மஞ்சூரியன் செய்வது போல் வெங்காயம் , குடை மிளகாய் சேர்த்து வதக்கி செய்யலாம்.

    பார்க்க :

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி