முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆலு மஷ்ரூம் செய்ய தெரியுமா..? சப்பாத்திக்கு பொருத்தமான சைட் டிஷ்...

ஆலு மஷ்ரூம் செய்ய தெரியுமா..? சப்பாத்திக்கு பொருத்தமான சைட் டிஷ்...

ஆலு மஷ்ரூம்

ஆலு மஷ்ரூம்

உருளைக்கிழங்கு சேர்த்து செய்யும் இந்த ஆலு மஷ்ரூம் ஆளை சுண்டி இழுக்கும் சுவை கொண்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மஷ்ரூம் விரும்பிகள் இங்கு ஏராளம். அதன் ஆரோக்கியமும் சுவையை போன்றே தாராளம். அதுவும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யும் இந்த ஆலு மஷ்ரூம் ஆளை சுண்டி இழுக்கும் சுவை கொண்டது. நீங்களும் சுவைத்து பார்க்க வேண்டுமெனில் இதோ ரெசிபி...

தேவையான பொருட்கள்

மஷ்ரூம் - 200 கிராம்

உருளைக் கிழங்கு - 2

வெங்காயம் - 2

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 2

தயிர் - 2 மேசைக் கரண்டி

பூண்டு - 5 பற்கள்

இஞ்சி - 2 அங்குலம்

சீரகம் - 1 மேசைக்கரண்டி

காய்ந்த சிவப்பு மிளகாய் - 3

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

மஞ்சள் - 1/2 மேசைக் கரண்டி

மல்லித் தூள் - 1/2 மேசைக் கரண்டி

மிளகாய்த் தூள் - 1/2 மேசைக் கரண்டி

உப்பு - தேவையான லவு

எண்ணெய் - 2 மேசைக் கரண்டி

தண்ணீர் - 1/2 கப்

கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை

உருளைக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கடாயில் போட்டு, நீர் வெளியேறும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

வெங்கயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் 3 -4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

வெங்காயத்தில் சூடு குறைந்த பின் அதை மிக்ஸி ஜாரில் கொட்டிக் கொள்ளுங்கள். அதோடு பூண்டு ,சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய விட்டு அதில் பெருங்காயத் தூள் போடவும்.

பின் நறுக்கிய இஞ்சி போட்டு வதக்கவும். தற்போது அரைத்த வெங்காய பேஸ்டை கொட்டி அடுப்பை சிறு தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் புதினா சாதம் : ஸ்கூலுக்கு கட்டிக்கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க

பச்சை வாசனை போனதும், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சரியான அளவில் சேர்த்து நன்கு கிளறி விடவும். சிறு தீயிலேயே சிறிது நேரத்திற்குக் கொதிக்க விடவும்.

தற்போது சிறிதாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், தயிர் ஆகியவற்றை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். இதை 3-4 நிமிடங்கள் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் நறுக்கிய மஷ்ரூம் துண்டுகளைச் சேர்க்கவும். பின் வதக்கிய உருளைக் கிழங்குகளைச் சேர்க்கவும். பின் மீண்டும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி இலையை மேலே தூவவும்.

தற்போது சுவையான ஆலூ மஷ்ரூம் தயார். இதைச் சப்பாத்தி, தோசை, பரோட்டா ஆகிய உணவுகளுக்கு சைடிஷ்ஷாக எடுத்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.

First published:

Tags: Mushroom recipes