• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மாம்பழத்தில் மோர் குழம்பு செய்ய டிரை பண்ணிருக்கீங்களா..? அப்போ உடனே செஞ்சு பாருங்க.!

மாம்பழத்தில் மோர் குழம்பு செய்ய டிரை பண்ணிருக்கீங்களா..? அப்போ உடனே செஞ்சு பாருங்க.!

மாம்பழம் மோர் குழம்பு

மாம்பழம் மோர் குழம்பு

வீட்டில் இருப்போரின் நாவுக்கு புது சுவையை அறிமுகப்படுத்துங்கள். 

  • Share this:
    மாம்பழ சீசன் என்பதால் பலரது வீட்டிலும் மாம்பழம் இருக்கலாம். அதை வைத்து இப்படி வித்யாசமான சுவையில் மோர் குழம்பு வைத்து பாருங்கள். வீட்டில் இருப்போரின் நாவுக்கு புது சுவையை அறிமுகப்படுத்துங்கள். 

    தேவையான பொருட்கள்:

    இனிப்பான மாம்பழங்கள் – 2

    புளித்த மோர் – 2 கப்

    அரிசி – ஒரு டீஸ்பூன்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    கடுகு – அரை டீஸ்பூன்

    வெந்தயம் – கால் டீஸ்பூன்

    பச்சை மிளகாய் – ஒன்று

    காய்ந்த மிளகாய் – 2

    தேங்காய் துருவல் – ஒரு கப்

    தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

    கறிவேப்பிலை – சிறிது

    உப்பு – தேவையான அளவு



    செய்முறை:

    பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு மாம்பழங்களை வெட்டிப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன் பின்னர் புளித்த மோரை மிக்சியிலோ அல்லது கரண்டியிலோ நன்றாக  கலக்கி எடுத்துக்கொள்ளவும். தேங்காய் துருவல், அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் ஆகிவற்றையும் எடுத்து மையாக அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அரைத்த விழுதை மோரில் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேக வைத்த மாம்பழங்களுடன் கலக்க வேண்டும். தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிட வேண்டும்.

    நன்றாக மோர் குழம்பு கொதித்த பின்னர், தாளிக்கும் கரண்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து  இறக்க வேண்டும். இப்போது ருசியான மோர் குழம்பு ரெடி.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: