HOME»NEWS»LIFESTYLE»food do you know how to cook ennai kaththarikkai kuzhambu esr

பார்த்தாலே நாவூற வைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு : சுவைத்தால் எப்படி இருக்கும்

பார்த்தாலே நாவூற வைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு : சுவைத்தால் எப்படி இருக்கும்
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
  • Share this:

கத்தரிக்காயை எந்த குழம்பில் போட்டாலும் அந்த குழம்பே மணக்கும். அதுவும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வைத்தால் தட்டில் ஒரு சோறு கூட மிச்சம் இருக்காது. எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 10
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பற்கள்
தக்காளி - 1
புளி - எலுமிச்சையின் அளவு
சிவப்பு மிளகாய் தூள் - 2 - 3 tsp
தனியா பொடி -2 tsp
புப்பு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Golden Milk : எப்படி செய்யணும் தெரியுமா?

தாளிக்கத் தேவையனவை

எண்ணெய் - 1/4 கப்
கடுகு - 1 tsp
வெந்தையம் - 2 சிட்டிகை
கருவேப்பிலை - சிறிதளவு



செய்முறை :

கத்தரிக்காயின் காம்புகளைக் கிள்ளாமல் அதன் அடிப்பகுதியில் X ஷேப்பில் நறுக்கிக் கொள்ளவும். பின் அவற்றை பயன்படுத்தும் வரை தண்ணீரில் போட்டு வைக்கவும்.

அடுத்ததாக சிறிய கின்னத்தில் புளியை ஊற வைக்க வேண்டும்.

சிறிய வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் தோல் உறித்து அவற்றையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

உணவில் அதிகம் பெருங்காயம்... ஆண்மைக் குறைபாடு ஆபத்தா...! மருத்துவம் கூறுவது என்ன...?

சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் புளித் தண்ணீர், சிவப்பு மிளகாய், தனியா, மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்குக் கலந்து கொள்ளவும்.

கெட்டியான பேஸ்ட் போல் கலக்கியதும் அவற்றை நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய்களின் இடையே ஸ்டஃப் போல் நிரப்பவும்.

பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தையம் சேர்த்து பொறிக்கவும். பின் சிறிய வெங்காயம், பூண்டு , கருவேப்பிளை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.

அடுத்ததாக மிளகாய் தூள் ஸ்டஃப் நிறைந்த கத்தரிக்காய்களைச் சேர்க்கவும். அடுத்ததாக, புளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் , உப்பு சேர்த்துக் கிளரவும்.

 

இறுதியாக குக்கரை மூடி குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை காத்திருக்கவும். விசில் வந்ததும் குக்கரை இறக்கி கொத்தமல்லி தழைகளைத் தூவி விடவும்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.






லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Sivaranjani E
First published: