முட்டையை வைத்து எண்ணற்ற உணவுகளை சமைக்கலாம். சட்டென உறவினர்கள் வந்துவிட்டாலும் வீட்டில் முட்டை இருந்தால் அருமையான மதிய விருந்தே வைக்கலாம். காலை உணவுக்கு உடனடியாக அதேசமயம் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டுமெனில் முட்டைக்கு நிகர் எதுவுமில்லை.
இப்படி சட்டென உதவும் சமையல் நண்பனான முட்டையை உடைக்காமலும், பதமாகவும் எப்படி வேக வைக்க வேண்டும் தெரியுமா..? எந்த பதத்தில் வேக வைத்தால் அதன் ஊட்டச்சத்து அப்படியே கிடைக்கும் என்னும் தகவலையும் இதில் தெரிந்துகொள்ளுங்கள்.
முட்டையை வேக வைத்து சாப்பிட்டால் அதன் சத்து முழுமையாகக் கிடைக்கும் என்ற கருத்தும் உண்டு. இதற்காகவே பலரும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவார்கள். முட்டையை வேக வைப்பது சுலபம் என்றாலும், அதை எப்படி சரியான பதத்தில் வேக வைப்பது என்று பலருக்கு தெரியாது. உண்மையில் முட்டையை எப்படி வேக வைக்க வேண்டும் தெரியுமா?
முட்டையை வேக வைக்க எப்போதும் போல் தண்ணீர், முட்டை அதை எடுக்கக் கரண்டி, குளிர்ச்சியான தண்ணீர் ஆகியவை போதும்.
முதலில் முட்டையை அகலமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றவும். முட்டையைவிட ஒரு இஞ்ச் அளவுக்கு நீர் அதிகமாக இருக்க வேண்டும். முட்டையை வேக வைக்கும்போது அடுப்பின் வெப்பம் குறைவாக இருக்க வேண்டும்.
தண்ணீர் கொதிநிலையை அடைந்து கொதிக்க ஆரம்பிக்கும்போது, அடுப்பை அணைத்துவிட்டு வெப்பம் வெளியேறாதவாறு தட்டு போட்டு மூடிவிடுங்கள்.
அப்படியே மூன்று நிமிடங்கள் சுடு தண்ணீரில் இருந்தால் குறைந்த அளவு வெந்திருக்கும். ஆறு நிமிடங்களாக இருந்தால் பாதியளவு வெந்திருக்கும். 10 நிமிடங்களாக இருந்தால் முழுமையாக வெந்திருக்கும். 12 நிமிடங்களைக் கடந்தால் கெட்டியான பதத்தில் வெந்துவிடும்.
பிறகு அவற்றை குளிர்ச்சியான நீரில் மூழ்கும்படி போட்டு வெப்பம் குறைந்ததும் எடுத்து உரிக்கலாம். உரிக்கும்போது இரண்டு முறை தட்டியும் உருட்டியும் உரித்தால் விரைவில் ஓடுகள் உரிந்துவிடும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
பார்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.