ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Christmas Recipe 2022 | மீன் கட்லெட் செய்ய ரெசிபி..

Christmas Recipe 2022 | மீன் கட்லெட் செய்ய ரெசிபி..

மீன் வடை

மீன் வடை

Fish recipe | குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான மீன் கட்லெட் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நினைவுத்திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் மீனை உணவாக எடுத்துக் கொள்வதால் குணமடையும் என்று  முன்னோர்கள் கூறியுள்ளனர். அத்தகைய இந்த மீனை வழக்கமாக குழம்பு, வறுவல் என்று செய்யாமல் இந்த கிறிஸ்துமஸ்-க்கு கட்லெட் போல  செய்து பாருங்கள்...

தேவையான பொருள்கள்:

முள் இல்லாத மீன் துண்டுகள் - 200 கிராம் (2 பேர் சாபிடலாம்)

வேகவைத்த உருளைக்கிழங்கு - 1

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2

மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

பிரெட் தூள் - சிறிது

முட்டை - 2 பிரெட் தூள்

எண்ணெய் -தேவைக்கு

உப்பு - தேவைக்கு

மீன் வடை

செய்முறை:

1. மீனை சுத்தம் செய்து வேக வைத்து அதில் உள்ள முள்ளை எடுத்து ஒன்று இரண்டாகப் பிசைந்து கொள்ளவும்.

2. கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை வதக்கி, மீன், மசாலாத்தூள், உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்றாக வதக்கி இறக்க வேண்டும்.

3. பின்னர் ஆறியதும் அதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

Also see... உணவில் கடுகு கீரையை சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

4. பிசைந்த அந்த மாவை உருண்டைகளாக உருட்டி கட்லெட்டாக தட்டிக் கொள்ள வேண்டும்.

5. பின்னர் முட்டையை ஒரு தனி பாத்திரத்தில் உடைத்து ஊற்றிக்கொள்ள வேண்டும்.

6. அந்த முட்டை கலவையில் உருண்டைகளை தோய்த்து, பிரெட் தூளில் பிரட்டி எடுக்க வேண்டும்.

7. இப்போது சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து சட்னியுடன் பரிமாறலாம்.

8. இந்த மீன் கட்லெட்-ஐ சட்னியுடனும் வைத்து சாப்பிடலாம்.

First published:

Tags: Fish, Food