2020ம் ஆண்டு நம் அனைவருக்கும் ஒரு மோசமான ஆண்டாக இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பல்வேறு கடினமாக விஷயங்கள் நடந்துவிட்டதால், கற்பனை செய்ய முடியாத விஷயங்கள் கூட இப்போது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாகத் தெரியவில்லை. அந்த வகையில் 2020ம் ஆண்டில் நிகழ்ந்த வினோதமான விஷயங்களின் பட்டியலில் புதிதாக ஒரு டிஷ் சேர்ந்துள்ளது. அதுதான் ‘சில்லி ஜிலேபிஸ்.’ (Chilli jalebis). ஜிலேபி பெரும்பாலும் வட இந்திய மாநிலங்களில் மிகவும் பேமஸ். அந்த வகையில் தற்போது இந்த புதிய டிஷ்ஷின் பெயரை கேட்டாலே எல்லோரையும் சற்று முகம் சுழிக்க வைக்கிறது.
ஆனால் யாரோ உண்மையில் இந்த உணவை தயார் செய்து சாப்பிட்டும் பார்த்துள்ளனர். அதில் ஜிலேபியுடன் குடை மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களை சேர்த்து சமைத்துள்ளனர். இந்த சில்லி ஜிலேபி டிஷ்ஷின் படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. மேலும் இதை பார்த்த நெட்டிசன்கள் மேலும், அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெவ்வேறு நிற குடை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களுடன் காணப்பட்ட பாரம்பரிய இனிப்பு டிஷ் ஜிலேபி மிக தவறான பொருத்தம் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
இதனை பார்ப்பதற்கு சில்லி பன்னீர் அல்லது சில்லி சிக்கன் போலவே தோன்றுவதாக பலர் கமெண்ட் அடித்துள்ளனர். ஆனால் தட்டில் மசாலா ஜிலேபியை பார்க்கும் போது இந்த வித்தியாசமான உணவை எப்படி அவர்கள் சாப்பிட்டார்கள் என்ற கேள்வியும் அனைவரின் மனதில் தோன்றியுள்ளது. ஜிலேபி என்பது கார்ன்ஃப்ளோர் மற்றும் வேறு சில பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு இனிமையான உணவாகும்.
இது சர்க்கரை பாகில் நனைக்கப்படுவதால், இந்த பலகாரம் மிகவும் ருசியாகவும் இனிப்பாகவும் இருக்கும். ஆனால் இந்த சில்லி ஜிலேபியை ட்விட்டரில் பகிர்ந்த ஒரு பயனர் கூறியதாவது, “இதை பேஸ்புக்கில் பார்த்தேன். இதன் பெயர் சில்லி ஜிலேபி? இது ஒரு குற்றம்! ” என ஆவேசமாக எழுதியிருந்தார். இந்த ட்வீட்டை பகிர்ந்து கொண்டவர் போலவே, அதனை பார்த்த அனைவரும் கலக்கமடைந்தனர். ஒருவர் அந்த சில்லி ஜிலேபியை ‘பேரழிவு’ என்று அழைத்தார். மற்றொருவர், “ஏன்? இது ஏன் என் ட்விட்டர் கணக்கில் வருகிறது என கேள்வி எழுப்பினார். இனொருவரோ ஊரடங்கு மக்களின் அறிவை இழக்க செய்துள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தார்.
https://twitter.com/KhalidFariya/status/1336554218275045378
https://twitter.com/drjatinanand/status/1336565118088347649
https://twitter.com/higher_keller/status/1336568055049011201
பல மாநிலங்களில் ஜிலேபிகளை காரமான உணவைக் கொண்டு சாப்பிட்டாலும், காரமான ஜிலேபிஸ் தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். சில இடங்களில், சமோசா மற்றும் ஜிலேபிஸ் இரண்டையும் சேர்த்து ஒரு கலவையாக சாப்பிடப்படுகிறது. அதேபோல போஹா மற்றும் ஜிலேபி ஆகியவை மத்திய பிரதேச மாநிலத்தில் உணவு வகையாகும்.
குஜராத் மாநிலத்தில், ஃபஃப்டா மற்றும் ஜிலேபி ஆகியவற்றின் கலவையானது மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. சமூக ஊடகங்களில் ஜிலேபி சில பரபரப்பை ஏற்படுத்தியது இது முதல் முறை அல்ல. சமீபத்தில், ஒரு நபர் ஜிலேபிகள் கொண்ட ஒரு கிண்ணத்தின் படத்தைப் பகிர்ந்து, இந்தியர் அல்லாதவர்களை இந்த உணவை அடையாளம் காணச் சொன்னார். அதற்கு வெளிநாட்டவர் பலர் பல்வேறு விதமான பெயர்களை அதற்கு வைத்தனர். ஒருவர் காரமான ராமன் நூடில்ஸ் என்று அழைத்தார்.
மேலும், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ட்விட்டர் பயனர்கள் ஜிலேபிஸைப் போலவே தோற்றமளிக்கும் இனிப்பு உணவின் படங்களை பகிர்ந்து கொண்டனர். ஆனால் அவர்களின் நாட்டில் அது வித்தியாசமாக பெயரிடப்பட்டிருந்தது. இலங்கையைச் சேர்ந்த ஒருவர், ஜிலேபிஸைப் போன்ற ஒரு உணவை தங்கள் நாட்டில் "பானி வலாலு" என்று அழைப்போம் என்று கூறியிருந்தார். இருப்பினும் சில்லி ஜிலேபி என்ற டிஷ் தற்போது இணைய வாசிகளின் வெறுப்புகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.