ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பால் உங்களுக்கு அலர்ஜியை உண்டாக்குகிறதா..? அதற்கு இதுதான் காரணம்..!

பால் உங்களுக்கு அலர்ஜியை உண்டாக்குகிறதா..? அதற்கு இதுதான் காரணம்..!

பால்

பால்

உங்களுக்கு பெரிய பிரச்னையாக இருந்தால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கால்சியம் சத்திற்கான முக்கிய உணவு பால் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் சிலருக்கு பால் அல்லது பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்டாலோ அலர்ஜி , ஒவ்வாமையை உண்டாக்குகிறது. ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று பார்க்கலாம்.

  பாலில் லாக்டோஸ் என்னும் ஒரு வகை சர்க்கரை உள்ளது. இந்த லாக்டோஸை உடல் தானாக உடைத்து கரைக்க வேண்டும். ஆனால் அப்படி உடைக்ககூடிய ஆற்றல் உங்கள் உடலுக்கு இல்லை என்றால்தான் அதன் பக்கவிளைவுகளாக அலர்ஜி, ஒவ்வாமையை உண்டாக்குகிறது.

  இந்த லாக்டோஸ் சகிப்பின்மையால் இந்தியாவில் 60 -65% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை ஆங்கிலத்தில் milk intolerance என்று அழைக்கின்றனர்.

  இவ்வாறு நிகழ என்ன காரணம்..?

  இந்த லாக்டோஸை உடைக்க உடலில் லாக்டேஸ் என்ஸைம் சுரக்க வேண்டும். ஆனால் இந்த லாக்டேஸ் சுரப்பு மன அழுத்தம், வயது மூப்பு ஆரோக்கியமற்ற உணவு, பதட்டம், சில முறையற்ற வாழ்க்கை முறையால் சுரக்காமல் போகலாம் அல்லது குறைவாக சுரக்கலாம்.

  அறிகுறி :

  லாக்டோஸ் உடையாமல் போனால் பால் குடித்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் வயிறு மந்தம், வயிறு கலக்கல், வயிற்று வலி, இறுக்கிப் பிடித்தல், வயிற்றில் சில சத்தங்கள், வாயு, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படலாம். இது பால் குடித்தால் மட்டுமல்ல பாலிலிருந்து கிடைக்கக் கூடிய மோர், தயிர் போன்ற பொருட்களை சாப்பிட்டாலும் உண்டாகும்.

  சிக்கன் சமைப்பதில் நீங்கள் என்ன தவறு செய்கிறீர்கள் தெரியுமா..?

  தீர்வு என்ன?

  பால் , பால் சார்ந்த உணவுகளைத் தவிர்க்கலாம். அதற்கு பதிலாக கால்சியம் சத்து நிறைந்த மற்ற உணவுப் பொருட்களில் கவனம் செலுத்தலாம். இது உங்களுக்கு பெரிய பிரச்னையாக இருந்தால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறலாம்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit


  லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published: